செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

எந்த பொத்தானை அழுத்தினாலும் அந்த கட்சிக்குதான் வாக்கு விழுந்தது
சனி 11 மார்ச் 2017 16:54:33

img

உத்தரப்பிரதேசம் மாநில தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வாக்கு இயந்திரங்களில் எந்த சின்னத்துக் கான பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கே வாக்குகள் பதிவானதாக குற்றம்சாட்டியுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநில தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தீர்மானித்துள்ளார்.இந்நிலையில், வாக்கு இயந்திரங் களில் தில்லுமுல்லு செய்து இந்த வெற்றியை பா.ஜ.க. அடைந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, லக்னோ நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மாயாவதி, வாக்கு இயந்திரங்களில் எந்த சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கே வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இந்த தேர்தலில் பா.ஜ.க. நேர்மையான முறையில் வெற்றி பெற்றது உண்மையானால், வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் மறுதேர்தலை நடத்துமாறு பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கோரிக்கை வைப்பாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையை உடனடியாக கைவிட்டு வாக்குச் சீட்டு முறையில் மறுதேர்தலை நடத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img