புதன் 14, நவம்பர் 2018  
img
img

என்னை வாழவைத்த தமிழும் தமிழ்ப்பள்ளியும்!
சனி 11 மார்ச் 2017 12:59:13

img

சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்து இன்று மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (UKM) மனோவியல் துறையில் கடனில்லாமல் இளங்கலை பட்டக் கல்வியைப் பெற்று பெற்றோர்களுக்கு கடன்சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதைப் பெருமையாக கருதுவதாகக் கூறுகின்றார் தனியார் கல்வி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் ஜெகன் மோகன் சங்கரன். ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளி கல்விக்குப் பின்னர் சுங்கை சிப்புட், தோக் மூடா அப்துல் அஜிஸ் இடைநிலைப்பள்ளியில் படிவம் 6 வரை கற்ற பின்னர் உயர்கல்வியை அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் மூன்று முறை துறைத் தலைவரின் (Dean) சிறப்புப் பரிசினையும் சிறப்பான கல்வி அடைவு நிலைக்கு பெற்றுள்ளதையும் தெரிவித்த ஜெகன் மோகன் சங்கரன் படிவம் 6இல் படிக்க விரும்பும் மாணவர்கள் முழுக் கவனத் தையும் எஸ்டிபிஎம் தேர்வின் தயார் நிலைக்குச் செலுத்தினால் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெறலாம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகனின் தந்தையான சங்கரன் கருப்பையா நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தாயார் சுசீலா நாகப்பன் முழு நேர குடும்பப் பெண்ணாக இருந்து தனது வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்திருந்த ஜெகன் மோகன் சங்கரன் படிவம் 6இல் உயர்கல்வியைப் பெற்றதன் வழி தனது பெற்றோர்களின் கனவினையும் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எஸ்பிஎம் தேர்விற்குப் பின்னர் படிவம் 6இல் பயிலும் வாய்ப்பு கிடைக்குமானால் அவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தரமான பட் டாதாரிகளாக உருவானால் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்ற முடியும் என்ற சமூக உணர்வையும் வெளிப்படுத்தியுள்ள ஜெகன் மோகன் சங்கரன் ‘டிப்ளோமா’ தகுதியிலான கல்வி உயர் வருமானம் பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தாது என்பதோடு, தனியார் கல்லூரிகளைத் தேர்ந் தெடுக்கும்போது பெறப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் (PTPTN) கடன் தொகை பல பின்விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்பதை அறிவுறுத்தியுள்ளார். படிவம் 6இல் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் நிச்சயம் அமையும் என்பதை தாம் அனுபவித்து வரும் நன் மைகளால் உறுதியாகக் கூற முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img