ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

உச்சக்கட்ட மோதலில் சசிகலா குடும்பம்!
வெள்ளி 10 மார்ச் 2017 15:33:45

img

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் மட்டுமே சந்தித்துப் பேசிவருகிறார். ' ஆட்சி அதிகாரத்திற்குள் தினகரன் கோலோச்சுவதை சசிகலா உறவுகள் ரசிக்கவில்லை. அதன் விளைவாகவே சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை உறவுகள் புறக் கணிக்கின்றனர் ' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை சசிகலாவுக்கு விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் சிறைப்பட்டனர். அவர் சிறை சென்ற மறுநாளே முதல மைச்சகராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. கடந்த 25 நாட்களாக சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்குத் தேவையான உடை, மருந்துகளை கார்டனில் உள்ளவர்கள் எடுத்துச் செல்கின்றனர். "ஆனால், சசிகலாவின் உறவினர்கள் யாரையும் பெங்களூரு சிறைப் பக்கம் பார்க்க முடிவதில்லை. அவர் சிறைக்குச் சென்ற முதல்நாளில் மட்டும் ம.நடராசன், டாக்டர்.வெங்கடேஷ் ஆகியோர் பார்க்கச் சென்றனர். அதன்பிறகு, அவரைப் பார்க்க ஒரு வரும் செல்லவில்லை. திவாகரன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை" என ஆதங்கத்தோடு பேசினார் கார்டன் உதவியாளர் ஒருவர், " இதுவரையில் இரண்டு முறை சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார் டி.டி.வி.தினகரன்.முதல்முறை செல்லும்போது வழக்கு தொடர்பாக விவாதிப் பதற்காக வழக்கறிஞர்களுடன் சென்றார். அப்போது சசிகலாவிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கினார். அவரிடம் சிறை நிலவரம் குறித்துக் கேட் டறிந்தார் தினகரன். அடுத்தமுறை, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய விளக்கம் குறித்து தெரிவிப்பதற்காகச் சென்றார். அப்போது அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் உடன் சென்றார். இந்த சந்திப்பில் குடும்ப உறவுகளின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்துப் பேசினார் தினகரன். அவர் எடுத்துக் கூறிய சில விஷயங்களைக் கேட்ட சசிகலா, என்ன செய்வது எனத் தெரியாமல் கண்கலங்கினார். அவரை ஆறுதல்படுத்திவிட்டு சென்னை வந்தார் தினகரன். இந்த சந்திப்பிற்குப் பிறகு தினகரனுக்கு எதிராகக் கொந்தளித்தார் தீபக். ' பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும். தினகரன் தலைமையை ஏற்க முடியாது' எனவும் சீறினார். இதன் பின்னணியில் ம.நடராசன் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. தீபக்கை சமாதானப் படுத்தும் வேலையில் கார்டனில் உள்ளவர்கள் இறங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரை தீபக் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. ஆட்சி அதிகாரமும் கட்சி அதிகாரமும் தினகரன் கையில் இருப்பதை சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை. தன்னுடைய மகனுக்குக் கட்சிப் பதவி கேட்டார் திவாகரன். ' கட்சி நிர்வாகத்தை தினகரனும் கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கவனிக்கட்டும். குடும்ப உறுப் பினர்கள் யாரும் தலையிட வேண்டாம். ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கும் வேலையில் இறங்கிவிட வேண்டாம்' என சிறைக்குச் செல்லும் முதல்நாள் உத்தரவு போட்டுவிட்டுச் சென்றார் சசிகலா. அந்த நேரத்தில் இவர்கள் அனைவரும் மௌனமாக இருந்தனர். எடப்பாடி பழனிசாமி பதவி யேற்கும் நாளிலும், ஆளுநர் வித்யாசாகர் ராவை தனியே சந்தித்தார் திவாகரன். ' நாங்கள் செல்வாக்கானவர்கள்' என வலிந்து காட்டிக் கொள்ள முயன் றார். இதன்பிறகு, உளவுத்துறையின் உயர் பொறுப்புக்கு தன்னுடைய சம்பந்தி ஜெயச்சந்திரனைக் கொண்டு வர முயற்சி செய்தார் திவாகரன். அவரையும் கரூர் தலைமையகத்துக்கு மாற்றல் செய்தார் தினகரன். நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த குடும்ப சண்டை வீதிக்கு வர ஆரம்பித்தது இதன் பிறகுதான். அதன்பிறகு, 'ஐ.ஏ.எஸ் மாற்றல் உத்தரவிலும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வரவில்லை' எனக் கொதித்தனர் குடும்ப உறவுகள். இதற்கும் தின கரனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் சசிகலாவை சந்திப்பதை ஒட்டுமொத்தமாக புறக் கணித்துவிட்டனர்" என்றார் விரிவாக. " பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வேண்டிய உதவிகளை, அ.தி.மு.கவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த நாமக்கல் செந்தில் உள்ளிட்ட சிலர் செய்து தருகின்றனர். கடந்த ஆட்சியின்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் அடைக் கப்பட்டனர். அப்போது தினகரன் உள்பட குடும்ப உறவினர்கள் அனைவரும் பெங்களூருவிலேயே அறை எடுத்துத் தங்கியிருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்க்கவே ஜெயலலிதா விரும்பாதபோதும் வலிந்து சென்று சிறை வளாகத்துக்குள் இவர்கள் நின்றனர். அந்த மரியாதையைக்கூட இவர்கள் சசிகலா வுக்குத் தரவில்லை. அந்தளவுக்கு அதிகாரத்துக்குள் நுழையத் துடிக்கின்றனர். சிறைக்குச் செல்வதற்கு முன்பு வரையில் இளவரசிக்கு ரத்தக் கொதிப்பு இல்லை. சிறைக்குச் சென்ற நாளில் இருந்தே அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. இரண்டு முறை சிறையில் மயங்கி விழுந்துவிட்டார். சசிகலா அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், பாஸ்கரன், திவாகரன், சுந்தரவதனத்தின் உறவுகள் என ஒருவர்கூட சிறைக்குச் சென்று சசி கலாவை சந்திக்கவில்லை. இவர்களை எல்லாம் வர வேண்டாம் என்று சசிகலா சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. தினகரனுக்குக் கொடுக்கும் முக்கியத் துவம்தான், இந்தப் புறக்கணிப்புக்கு ஒரே காரணம். இவர்களைவிட, இன்னும் பரிதாபத்திற்குரியவராக இருக்கிறார் சுதாகரன். அவரது மனைவி, பிள் ளைகள்கூட அவரை சந்திக்க வரவில்லை. அரைக்கால் ட்ராயரைப் போட்டுக் கொண்டு சிறைக்குள் வலம் வருகிறார். நாள்தோறும் வாக்கிங் போனாலும், சசிகலாவை பாதித்துள்ள சர்க்கரையின் அளவும் குறையவில்லை. அவருக்குத் தேவையான மாத்திரைகளை விவேக் ஜெயராமன் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார். தினகரனை ஓரம்கட்டும் வரையில் குடும்ப உறவுகளின் கோபம் தணிய வாய்ப்பில்லை" என்கிறார் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர். ஜெயலலிதா இருந்தவரையில் ஆட்சி அதிகாரத்தின் மறைவில் நின்று கொண்டே காரியம் சாதித்த சசிகலாவின் உறவுகள், நேரிடையாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் வித்தை தெரியாமல் சிறை நாட்களை எண்ணிக் கொண்டு வருகிறார் சசிகலா.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img