வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

சிறுமிகளிடம் பாலியல் கொடுமை !
வெள்ளி 10 மார்ச் 2017 14:07:42

img

சிறுமிகளிடம் பாலியல் கொடுமை புரிந்த அமெரிக்க பிரஜைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மிகக்குறைவான தண் டனை விதித்திருப்பது குறித்து மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த தற்காப்புக் கலை பயிற்சியாளரான ஜோஸ்வா ரோபின்சன் என்ற 39 வயதுடைய நபர், இரு சிறுமிகளை பாலியல் இச்சைக்கு பலி யாக்கியதோடு, அந்தச் சம்பவங்களை படமெடுத்து வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட் டிருந்தார். மேலும், ஜோஸ்வா தங்கியி ருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆபாச படங்களும் சிறார்கள் தொடர்பான ஆபாசப் படங்களும் மீட்கப்பட்டன. இந்த நபருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியது. இந்த ஆளுக்கு விதிக்கப் பட்ட இந்தத் தண்டனை போதாது என்று மக்கள் மத்தியில் பரவலாக அதிருப்தி உருவாகி இருக்கிறது. இரு சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. தண்டனை மிகக்குறைவாக வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து மக்கள் மகஜர் இயக்கத்தினைத் தொடங்கி யுள்ளனர். மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் அவன் மீது சுமத்தப்பட்டிருந்தன. இதில் மூன்று குற்றச் சாட்டுக்கள் சிறுமிக ளுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது தொடர்பானதாகும். மற்றவை ஆபாசப் படங்கள் வைத்திருந் தது, சிறுமிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டியது சம்பந்தப்பட் டவை யாகும். இந்தக் குற்றச்சா டுக்களின் பேரில் 4 ஆண்டுகள் மட்டும்தான் சிறைத்தண்டனையா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரும் மகஜரில் பல ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img