செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

இந்தியர்களின் அடிச்சுவடுகள் அழிக்கப்படும் அவலம்! முற்றுப்புள்ளி எப்போது?
வியாழன் 09 மார்ச் 2017 13:41:44

img

நாட்டில் தோட்டப்புற வாழ்க்கையோடு தங்களை பிணைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த இந்தியர்களின் வரலாற்றை சொல்வதற்கு எஞ்சியிருக்கும் அடை யாளங்கள் கோயில்கள், தமிழ்ப்பள்ளிகள், இடுகாடுகள்தான். இவற்றில் கோயில்கள், இடுகாடுகளை சேதப்படுத்துதல், அகற்றுதல் போன்றவை சந்தடி தெரியாமல் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலங்கள் ஒரு தொடர்கதைதானா? கிள்ளான் பள்ளத்தாக்குப்பகுதி, நிறைய தோட்டங்கள் சூழ்ந்திருந்த வேளையில் நான்கு, ஐந்து தோட்டங்களுக்கு ஒரு இடுகாடு என்ற பிரிட்டிஷார் ஏற் படுத்திய இடுகாடு முறை, 1980 களில் மேம்பாட்டு அலையினால் பல தோட்டங்கள் அகற்றப்பட்டு, காணாமல் போயின. தற்போது தோட்டங்கள் மற்றும் அந்த தோட்டங்களில் வாழ்ந்த மக்களை நினைவுகூர்வதற்கு ஆங்காங்கு சில இடுகாடுகள் மட்டுமே இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் முன்னணி தோட்ட நிறுவனமாக விளங்கிய சைம் டார்பியின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்று புக்கிட் ராஜா தேட்டமாகும். இந்த தோட்டம் 6 டிவிஷன்களை உள்ளடக்கி இருந்தன. புக்கிட் ராஜா செம்பனை ஆயில் மில், பூனியன் தோட்டம், மெயின் டிவிஷன் (மூன்றாம் கட்டை), வாழைத் தோட் டம் ( ஆஸ்பிட்டல்), நாலாங்கட்டை மற்றும் உள் நாலாங் கட்டை ஆகியவையே அந்த ஆறு தோட்டங்களாகும். இந்த ஆறு தோட்டங்களுக்கும் இருந்த ஒரே இடுகாடு பூனியன் தோட்டத்தில் அமைந்திருந்தது. 1960 க்கு முன்பு, மெயின் டிவிஷனில் இருந்த இடுகாடு, பின்னர் பூனியன் தோட்டத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 1960 முதல் 1980 வரையில் கிட்டத்தட்ட 2,500 பிரேதங்கள் இந்த பூனியன் தோட்ட இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளன என்று தோட்ட விவர குறிப்பு காட்டுகிறது. 1990 க்கு பிறகு புக்கிட் ராஜா தோட்டங்கள் மேம்பாட்டுக்கு வழிவிடப்பட்டு முற்றாக அகற்றப்பட்டு விட்டன. கிள்ளான், மேரு சாலையில் அமைந்திருந்த புக்கிட் ராஜா தோட்டங்களில் இந்தியர்கள் வாழ்ந்தவர்கள் என்று சொல்வதற்கு இன்னமும் எஞ்சியிருக்கும் அடையாளம் இந்த இடுகாடுதான். சிலாங்கூர் பந்திங்கையும் பேரா, தைப்பிங்கையும் இணைக்கும் 233 கிலோ மீட்டர் தொலைவிலான மேற்கு கரையோர விரைவு நெடுஞ்சாலை (West Coast Expressway Sdn. Bhd.) திட்டத்தினால் கடந்த மூன்று மாத காலமாக சந்தடி தெரியாமல்புக்கிட் ராஜா தோட்டத்தின் பூனியன் தோட்ட இடுகாடு மெல்ல அகற்றப்பட்டு இருப்பது அந்த தோட்டத்தில் வாழ்ந்த முன்னாள் தொழிலாளர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தங்களின் முன்னோர்களின் உறைவிட பூமியாக கருதப்படும் பூனியன் தேட்ட இடுகாட்டுப்பகுதியில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புதைக்குழிகளுக்கு மேலே நெடுஞ்சாலை அமைக்கப்படுவதற்காக கிரவல் மண் நிரப்பப்பட்டு, சமப்படுத்தப்பட்டுள்ளது அந்தபுதைக்குழிகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்களை வேதனைப்படுத்தியுள்ளது. எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் சம்பந்தப்பட்ட புதைக்குழிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அத்துமீறிய செயல் என்று கூறி, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் ராஜா மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். கடந்த காலங்களில் இது போன்று புதைக்குழிகள் மற்றும் கல்லறைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையோ அல்லது எந்தவொரு நபரையோ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டவில்லை; நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆலயங்களுக்கும் இந்து சம்பிரதாயங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள மலேசிய இந்து சங்கமும் வாய்திறக்கவே இல்லை. ஆனால், அது போன்ற சம் பவங்கள் புக்கிட் ராஜா தோட்டத்தில் மட்டுமல்ல. நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் குறிப்பாக இந்து இடுகாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களை அல்லது புதைக்குழிகள் மற்றும் கல்லறைகளை சேதப்படுத்துதல் அல்லது அவற்றை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டவும் குற்றவியல் சட்டம் 297 வகை செய்கிறது. ஆனால், பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் போலீசாரும் சட்டத்துறை அலுவலகமும இதுவரையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஹிண்ட்ராப் முன்னோடித் தலைவர் பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். West Coast Expressway Sdn. Bhd. என்ற நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளுர் மக்களுடன் கலந்தாலோசிக்காமலேயே தான் தோன்றித்தனமாக இடுகாட்டை சேதப்படுத்தி புதைக்குழிகளுக்கு மேல் மண்ணை நிரப்பி சாலையை அமைக்க முற்பட்டு இருப்பது அத்துமீறிய செய லாகும். ஆனால், இந்த விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம் அமைதி காத்து வருவதற்கான மர்மம்தான் என்ன என்று அவர் வினவினார். ஏற்கெனவே ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் தோட்டம் ஐ.சி.டி. நகராக மேம்படுத்த முனைந்த போது அங்கு காலங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த இடுகாட்டுப் பிரச்சினைக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. நாட்டின் முதல் தர ரப்பர் பால்சீட்டுகளை தயாரித்த முதல் தோட்டமாக விளங்கிய மிட்லண்ட்ஸ் தோட்ட வெற்றிக்கு பாடுபட்டவர்கள் அந்த தோட்டத்தில் பணியாற்றிய இந்தியப் பாட்டாளிகள் ஆவர். மாவீரர் வேலு பிறந்த தோட்டமும் இதுதான். அவர் வீர மர ணம் அடைந்த போது, அவரின் கல்லறையும் மிட்லண்ட்ஸ் தோட்டத்தில்தான் இருந்தது. ஐ.சி.டி. நகர் உருவாக்க 1995 ஆம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டங் கள் செயல்படுத்தப்பட்ட போது அவரின் கல்லறையும் மண்ணோடு மண்ணானது. கேட்பாரற்ற நிலையில் அந்த இடுகாடும் காணாமல் போனது. தோட்டம், கோயில், தமிழ்ப்பள்ளி, இடுகாடு என்ற ஒரு பாரம்பரியத்துடன் வாழ்ந்த இந்தியர்களின் நிலை கேட்பாரற்றுக் கிடக்கும் இதுபோன்ற அவலங் களுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img