செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

இடுகாட்டு நில அத்துமீறல் விவகாரம்!
புதன் 08 மார்ச் 2017 14:05:02

img

நெடுஞ்சாலை திட்டத்தின் காரணமாக, புக்கிட் ராஜா முன்னாள் பூனியன் தோட்டத்தில் உள்ள இந்தியர் இடுகாட்டு நிலத்தில் அத்துமீறல் நிகழ்ந்திருப்பதை தொடர்ந்து அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கல்லறைகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த இடுகாட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டி ருந்த 50-க்கும் மேற்பட்ட சடலங்கள் எவ்வித முன் அனுமதியுமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருப்பது குறித்து அப்பகுதிவாழ் இந்தியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்ந 1963-ஆம் ஆண்டில் அங்கு பூனியன் தோட்டம், சுங்கை ராசா தோட்டம், புக்கிட் ராஜா மெயின் டிவிஷன், சுங்கை பிஞ்சாப் ( புக்கிட் ராஜா வாழைத் தோட்டம்), என்.இ. தோட்டம் (நாலாங்கட்டை), புக்கிட் ராஜா செம்பனை ஆலை டிவிஷன், ஆர்பெண்டன் தோட்டம் ஆகிய ஏழு தோட்டங்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இந்தியர் இடுகாட்டு நிலத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேலான பிரேதங்கள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், சம்பந்தப்பட்டவர்களின் முன் அனுமதி இல்லாமல் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கல்லறைகள் அகற்றப்பட்டுள்ளன. அங்கு புதைக்கப் பட்டிருந்த பிரேதங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று புக்கிட் ராஜா வட்டார சமூகத் தலைவரும் சேவையாளருமான சு.குமாரவேல் கூறினார். இந்நிலத்தின் முன்னாள் உரிமையாளரான சைம் டார்பி நிறுவனம், இந்தியர் இடுகாட்டுத் தேவைக்காக கொடுத்த இந்த நிலம் கடந்த 1988-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. முன்பிருந்த நிர்வாகம் இதனை அப்போது பராமரித்து வந்தது. பிறகு, சரியான பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த இடுகாட்டு நிலப்பகுதிக்கு அருகில் பொதுப்பணி அமைச்சு பந்திங் - தைப்பிங் மேற்குக் கரை நெடுஞ்சாலைத் திட்டத்தை மேற்கொண்டு வருவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குமார வேல் தெரிவித்தார். இந்த அத்துமீறல் தொடர்பாக முறையான போலீஸ் புகாரும் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதனிடையே, இந்த நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து இங்குள்ள பூனியன் தோட்ட ஆலய நிர்வாகம் தொடக்க காலம் தொட்டே சம்பந்தப்பட்ட மேம்பாட் டாளர் நிறுவனத்திடமும் மாநில, மத்திய அரசாங்கத்திடமும் கடிதம் எழுதியும் நேரடி சந்திப்புக்கள் வாயிலாகவும் தங்களின் கருத்தை தெரிவித்து வந்தி ருப்பதாக ஆலயத்தின் செயலாளர் இரா.மூக்கன் தெரிவித்தார். ஆனால் அதையும் மீறி அங்குள்ள மக்களுக்கு தெரியாமலேயே இந்த அத்துமீறல் நிகழ்ந் திருப்பதாக அவர் சொன்னார். முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த இடுகாட்டு அறிவிப்புப் பலகை அங்கிருந்து சுமார் 50 மீட்டருக்கு அப்பால் நடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, காலஞ்சென்ற தங்கள் குடும்பத்தாரின் பிரேதங்கள் இப்பகுதியில்தான் புதைக்கப்பட்டதாக எம். ராஜேந்திரன், சரஸ்வதி பெருமாள் ஆகி யோர் தெரிவித்தனர். இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று கோத்தா அங்கெரிக் சட்டமன்ற இந்தியர் நல பொறுப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img