திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

அரசியலுக்கு வருகிறார் நடிகர் கமல்?
ஞாயிறு 05 மார்ச் 2017 14:09:24

img

நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார் கமல். அண்மைக்காலமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமக்கு அரசியல் சரிப்பட்டு வராது என கமல் தொடர்ந்து கூறிவருகிறார். அத்துடன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்ப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதனால் கமல்ஹாசன் அரசியல் பிர வேசத்தை அறிவிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
img
`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது.

மேலும்
img
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!

சீனிவாசன் சாலையின் ஓரத்தில் நின்று போன்

மேலும்
img
சோபியாவை போலீசார் மனரீதியாக சித்ரவதை செய்துள்ளனர்: சோபியா வழக்கறிஞர் புகார்

சோபியா மற்றும் அவரது தந்தை சாமி

மேலும்
img
இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

கடந்த 20ந் தேதி தன்னுடைய மகள்கள் படிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img