வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பூச்சோங் ஸ்ரீ மகா சக்தி ஆலயம் முன் அறிவிப்பின்றி உடைத்து தரைமட்டம்!
சனி 04 மார்ச் 2017 15:08:20

img

பூச்சோங் பிரிமாவில் உள்ள ஸ்ரீ மகா சக்தி ஆலயத்தை எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி மேம்பாட்டு நிறுவனத்தினர் உடைத்து தரைமட்டமாக்கினர் என்று அவ்வாலய நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். ஸ்ரீ மகா சக்தி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்படு வதால் ஆலயத்தை அப்புறப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டு காலமாக இவ்விடத்தில் வழிபாடுகள் நடைபெற்று வருவதால் ஆலயத்தை அப்புறப் படுத்த மாட்டோம் என நாங்கள் போராடினோம். இவ்வேளையில் இவ்வாலயம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவ்வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் எந்தவொரு நடவடிக்கை யும் மேற்கொள்ள வில்லை. இந்நேரத்தில் தான் மேம்பாட்டு நிறுவனத்தினர் ஆலயத்தில் உள்ள சிலைகளை உடைத்ததுடன் அதை எடுத்துச் சென்று கடலில் வீசினர்.இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பல தலைவர்கள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேம்பாட்டு நிறுவனத் தினரும் தங்களின் தவற்றை ஒப்புக் கொண்டனர்.ஆனால் மேம்பாட்டு நிறுவனத் தினர் தற்போது ஆலயத்தை முழுமையாக உடைத்து தரைமட்டமாக்கி விட்டனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் மேம்பாட்டு நிறுவனத்தினர் எந்தவொரு பதிலையும் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று ஆலயத்தின் தலைவர் மகேஸ்வரன் நேற்று கூறினார்.சிலாங்கூர் மாநில அரசு, நகராண்மைக் கழகம், போலீஸ் என யாருக்கும் தெரியாமல் மேம்பாட்டு நிறுவனத்தினர் எப்படி ஆலயத்தை உடைக்க முடியும் என்பது தான் எங்களின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. மக்கள் கூட்டணியின் ஆட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் எந்தவொரு ஆலயமும் உடைபடாது என்று கூறிக்கொள்பவர்கள் இன்று எங்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறார்கள்.பூச்சோங்கில் உள்ள சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களும் எங்களை சந்தித்து இவ் விவகாரம் குறித்து எந்தவொரு விளக்கமும் தரவில்லை. இருந்த போதிலும் இவ்விவகாரத்தை நாங்கள் சாதாரணமாக விடப்போவதில்லை. இச்சம்பவத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கமும், மேம்பாட்டு நிறு வனமும் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று ஆலய உறுப்பினர் சுரேஷ் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img