திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

இந்தியர்களின் வீடுகள் பறிப்பு விவகாரத்தில் ஜெயக்குமாரின் மௌனம் ஏன்?
சனி 04 மார்ச் 2017 13:15:45

img

தேசிய நில நிதி கூட்டுறவுக்கழகம் ஒரு நல்ல நோக்கத்திற்காக குறைந்த விலையில் டத்தோஸ்ரீ சாமிவேலுவிடம் விற்பனை செய்த 101 ஏக்கர் நிலத்தில் தோட்டப்பாட்டாளி களுக்கு வீடு கட்டிக்கொடுக்காமல் ஏப்பம் விடப்பட்ட விவகாரத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார் இதுவரையில் வாயைத் திறக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த மூன்று தோட்டங்களில் உள்ள மக்களுக்கும் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் டோவன்பி தோட்டத்தில் பெரிய வீடமைப்புத்திட்டத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி, ஏக்கருக்கு வெ. 68 ஆயிரம் வெள்ளி விலை போக வேண்டிய நிலத்தை அடிமட்ட விலைக்கு ஏக்கருக்கு வெ. 11,280 வீதம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திடமிருந்து 101 ஏக்கர் நிலத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கிய டத்தோஸ்ரீ சாமிவேலு 11 ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் அந்த வீடமைப்புத்திட்டத்திற்காக ஒரு செங்கலைகூட நகர்த்தவில்லை. இந்நிலையில் அந்த 101 ஏக்கர் நிலமும் சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு (Syarikat Ratus Sanjung Sdn. Bhd) (No.Pendaftaran: 341300-D) விற்பனை செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரராக எண்.52பி, பெர்சியாரான் கிரின் ஹில், ஈப்போ என்ற முக வரியில் உள்ள ஹூயின் பெங் ஃபாட் (Huen Peng Fatt) என்ற ஒரு சீனர் இருந்து வருகிறார் என்பது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் செய்யப் பட்டுள்ள ஒரு புகாரின் வழி அம்பலமாகியுள்ளது. இந்த நில கொள்முதலில் முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோஸ்ரீ சாமிவேலு பெரும் முறைகேட்டை புரிந் துள்ளார் என்றும் அந்த நிலம் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த டோவன்பி தோட்டம், சுங்கை குருடா தோட்டம் மற்றும் சுங்கை சிப்புட் தோட்டம் ஆகிய 3 தோட்டங்களை சேர்ந்த தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய நிலம் என்றும் அந்த நிலத்தில் பாட்டாளி மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காமல் அதனை டத்தோஸ்ரீ ஒரு சீனரான Huen Peng Fatt என்பவருக்கு தாரை வார்த்துக்கொடுத்துள்ளார் என்றும் கூறி சாமிவேலுக்கு எதிராக சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த லோகாநாதன் த/பெ மாணிக்கம் என்பவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த நில கொள்முதல் விவகாரம் தற்போது ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடும் விசாரணைக்கு இலக்காகியிருக்கும் வேளையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார் இது வரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்ற கேள்வியை தொகுதி மக்கள் எழுப்பியுள்ளனர். சுங்கை சிப்புட்டை பிறப்பிடமாக கொண்ட தனிமனிதர் லோகநாதன் த/பெ மாணிக்கம் காட்டி வரும் அக்கறையிலும் ஆர்வத்திலும் ஒரு துளியளவுகூட ஜெயக்குமார் இதுவரையில் காட்டவில்லை. அப்படியென்றால் 101 ஏக்கர் நிலத்தை பாட்டாளிகளின் பெயரைச் சொல்லி தனக்கு வேண்டிய சீனரின் பெயரில் பதிவு செய்து கொண்ட சாமிவேலுவுக்கும், அவரை குறைகூறி, தேர்தலில் தோற்கடித்த ஜெயக்குமாருக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் 34 ஆண்டு கால சரித்திரத்தையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்து, அவரின் அரசியல் வாழ்வையே அஸ்தமனமாக்கி, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த ஜெயக்குமார், அந்த தேர்தலில் சாமிவேலுவை தோற்கடிப்பதில் காட்டிய வேகத்தையும் விறுவிறுப்பையும் மூன்று தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் விவகாரத்தில் காட்டாதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாமிவேலுவை தோற்கடிப்பதற்காக இந்த மூன்று தோட்டங்களிலும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஜெயக்குமார் பயன்படுத்திய பிரமாஸ்திரகோல் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்கிய 101 ஏக்கர் நிலம்தான். இதே விவகாரத்தைதான் கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியை தோற்கடிப்பதற்கும் ஜெயக்குமார் பயன்படுத்தினார். பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்று ஓர் அநீதியை தடுப்பதற்காக ஜெயக்குமார் முன்னெடுத்த விவகாரத்தில் இன்று அவரே தடம்மாறி, எந்தவொரு அக்கறையில்லாமல் அந்த விவகாரத்தை கிணற்றில் போட்ட கல்லாக கைவிட்டு இருப்பது அவரின் பொறுப்பின்மையையும் அலட்சியப் போக்கையும் காட்டுகிறது என்பதுடன் தொகுதி மக்களை அவர் கைவிட்டு விட்டார் என்றே கருதவேண்டியுள்ளது. இனி லோகநாதனின் கூற்றுப்படி இந்த விவ காரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையம்தான் தீர்வு காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பாட்டாளிகளின் பிரச்சினையில் ஜெயக்குமார் எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு நேற்று பிற்பகல் 2 மணிக்கு அவ ருடன் மலேசிய நண்பன் தொடர்பு கொண்டது. தொலைபேசியை எடுத்த அவரின் துணைவியார், தனது கணவர் கைத்தொலைபேசியை வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியே சென்று விட்டார் என்று பதில் அளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img