வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

இந்தியர்களுக்குச் சொந்தமான 900 வீடுகள் பறிபோயின.
வெள்ளி 03 மார்ச் 2017 14:37:14

img

குருவிக்கும் கூடு உண்டு, ஏழை தோட்டப் பாட்டாளிக்கும் சொந்த வீடு உண்டு என்ற பெரும் கனவோடு துன் சம்பந்தன் உருவாக்கிய தேசிய நில நிதி கூட் டுறவு சங்கம், பாட்டாளிகளின் துயர் அறிந்து பெருமனதுடன் குறைந்த விலையில் விற்பனை செய்த 101 ஏக்கர் நிலத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு, திட்ட மிட்டப்படி வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கி இருந்திருந்தால் சுங்கை சிப்புட் டோவன்பி தோட்ட நிலத்தில் இன்று 900 இந்தியர்கள் சொந்த வீட்டுக்கு உரிமையாளர்களாகி இருப்பார்கள். ஆனால், அந்த நிலம் சந்தடி தெரியாமல் ஒரு சீனருக்கு சாமிவேலு திசை திருப்பியதால் இந்தியர்கள் உரிமையாளர்களாக வேண்டிய 900 வீடுகள் இன்று பறிபோன அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலத்தில் கட்டப்படவிருந்த வீடுகளுக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்தின் தோட்டங்களாக இருந்த சுங்கை சிப்புட் தோட்டம், சுங்கை குருடா தோட்டம், டோவன்பி தோட்டம் ஆகியவற்றில் உள்ள ஏழை தோட்டப் பாட்டாளிகளும் , அந்த கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களும் சொந்தம் கொண்டாட வேண்டிய நிலையில் இருந்தனர். சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மிகப்பெரிய வீடமைப்புத்திட்டத்தை முன்நிறுத்திதான் டோவன்பி தோட்டத்தில் 101 ஏக்கர் நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்திடமிருந்து பெற்றார். நடப்பு சந்தை விலையில் வெ. 68 ஆயிரம் வெள்ளிக்கு விற் பனை செய்யப்படவிருந்த அந்த நிலம், மூன்று தோட்டங்களைச் சேர்ந்த தனது உறுப்பினர்கள் பயன்பெறப் போகிறார்கள் என்ற நல்லெண்ணத்தில்தான் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் டத்தோஸ்ரீ சாமிவேலுவிற்கு அடிமட்ட விலையில் ஏக்கருக்கு 11,280 வெள்ளிக்கு விற்பனை செய்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அந்த நிலம் 11 ஆண்டுகள் கடந்த நிலையில் சுங்கை சிப்புட் இந்தியர்களுக்கு எந்தவொரு வீடும் கட்டித் தரப்படாமல் அது சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் (Syarikat Ratus Sanjung Sdn. Bhd) (No.Pendaftaran: 341300-D) கீழ் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரராக எண்.52பி, பெர்சியாரான் கிரின் ஹில் ஈப்போ என்ற முகவரியில் உள்ள ஹூயின் பெங் ஃபாட் (Huen Peng Fatt) என்ற ஒரு சீனர் இருந்து வருகிறார் என்பது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு புகாரின் வழி அம்பல மாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நிலம், டோவன்பி தோட்டத்தின் முன்புறம் உள்ள வீடமைப்புப் பகுதியை கடந்து சென்றால் பள்ளி, கோயில் என்று வருகிறது. அதன் பின் னர் தோட்டத்தின் 900 ஏக்கர் நிலம் வருகிறது. முன்புறம், தோட்ட நிர்வாகியின் பங்களாவீடு, பணியாளர்களின் வீடுகள் வருகின்றன. அந்த தோட்ட நிலப் பகுதியின் மையப்பகுதியில்தான் 101 ஏக்கர் நிலத்தையும் டத்தோஸ்ரீ சாமிவேலு வாங்கியுள்ளார் என்றால் அது உண்மையிலேயே வீடமைப் புத்திட்டத்திற்குரிய பகுதிதானா? என்ற சந்தேகம் வலுத்து இருப்பதாக புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 900 ஏக்கர் கொண்ட ஒரு நிலப்பகுதியில் ஒரு வீடமைப்புத்திட்டத்தை உருவாக்க வேண்டுமானால் அது முன்புறம் இருக்கலாம். பின்புறம் இருக்கலாம். அல்லது வலது, இடது புறம் இருக்கலாம். ஆனால், தோட்டத்தின் நடுப்பகுதியில் நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இருப்பதா கவே கருதப்படுகிறது. அப்படியென்றால் சுங்கை சிப்புட் மக்களுக்காக வீடமைப்புத்திட்டத்தை முன்நிறுத்தி குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அந்த நிலப்பகுதியில் தொழிற் சாலை ஒன்று கட்டுவதற்காக சீனரிடம் அந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். இந்தியர்களுக்காக பெறப் பட்ட நிலத்தை சீனருக்கு விற்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் சாமிவேலுக்கு ஏன் ஏற்பட்டது? ஒரு நல்ல நோக்கத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தில் அதிகார துஷ்பிரயோகம், முறைகேடு போன்றவை நடந்து, இருப்பதாக தாங்கள் சந்தேகப்படுவதால் இந்த 101 ஏக்கர் நிலத்தில் கோயில், திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏழை பட்டாளிகளுக்காக கட்டப்படவிருந்த 900 வீடுகளை உள்ளடக்கிய வீட மைப்புத்திட்டம் எப்படி பறிபோனது என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையம் விரிவாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த லோகநாதன் த/பெ மாணிக்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img