ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

மக்கள் திலகம் எம்ஜிஆர் படைத்த அதிமுகவை, ஜெயலலிதா ...
வியாழன் 02 மார்ச் 2017 15:32:34

img

மக்கள் திலகம் எம்ஜிஆர் படைத்த அதிமுகவை, ஜெயலலிதா பொக்கிஷமாக பாதுகாத்தார், ஆனால் தற்போது சசிகலா தரப்பு அதிமுகவை ஒன்றுமில் லாமல் ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். திண்டுக்கல் நகரில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம்) செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருப்பதுதான் உண்மை யான அதிமுக என்றார். சில பதவிகளுக்காக அதிமுகவில் சில சட்டசபை உறுப்பினர்கள் சசிகலா தரப்புடன் இருக்கின்றனர் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார். பெருவாரியான மக்கள் பன்னீசெல்வம் பக்கம்தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாருமே அவரை பார்க்க முடியவில்லை. அதற்கு சசிகலா தரப்பு அனுமதி வழங்கவில்லை. உண்மையான அதிமுக யார் என்பதை தெரிந்து கொள்ள, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய சசிகலா ஆதரவு 122 எம்.எல்.ஏக்களும் தயாரா? எம்ஜிரா் அதிமுகவை கடந்த 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். அதை அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா 32 ஆண்டுகளாக கட்டிக் காத்தார். தேசிய அளவிலும் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ள அதிமுக தற்போது குரங்கு கையில் பூ மாலையைப் போல சசிகலா தரப்பிடம் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. ஜெயலலிதா சசிகலா கும்பலால் இறப்பார் என்று தெரிந்திருந்ததாலோ என்னவோ, சசிகலா எப்போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அவர் எப் போதும் தனக்கு பணிவிடை செய்பவர் மட்டுமே என்றும் தனது அரசியல் வாரிசு ஓ.பன்னீர் செல்வம்தான் என்றும் ஜெயலலிதா அவ்வப்போது எங்களிடம் கூறியுள்ளார் என்றார் அவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img