திங்கள் 17, ஜூன் 2019  
img
img

சிறைச்சாலைகளில் கைதிகளின் மரணங்கள் அதிகரிப்பு!
வியாழன் 02 மார்ச் 2017 15:22:57

img

சிறைச்சாலைகளில் கைதிகளின் மரணங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் அவர்களின் உடல்நிலை பாதுகாப் பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. நாட்டில் உள்ள 35 சிறைச்சாலைகளில் 52,150 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளில் நிகழும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டுமானால் சிறைச்சாலைகளின் பலவீனங்கள் களையப்பட்டு, விதி முறை கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அதற்கு அரச விசாரணைக்குழு ஒன்று அமைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலேசிய சிறைச்சாலைகளில் கைதிகள், அடித்து துன்புறுத்தப்படுகின்றனர்.மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடத்தப்படுகின்றனர். அவர்கள் கவனிக்கப்படும் முறை, தரம் தாழ்ந்துள்ளது. இவற்றையெல்லாம் களைவதற்கு அரச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை என்றால் கைதி களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும். நீதித்துறையும் தனது கடமையிலிருந்து விலகி யதாக பொருள்படும் என்று கூட்டரசு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசநிந்தனை வழக்கில் இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை காஜாங் சிறைச்சாலையில் அனுபவித்த ஹிண்ட்ராப் முன்னோடி தலைவரும் மனித உரிமை போராட்டவாதியுமான பி. உதயகுமார், காஜாங் சிறைச் சாலையில் கைதிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து அந்த சிறைச்சாலைக்கு எதிராக தொடுத்துள்ள பொது நல வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் அப்பீல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனு இன்று வியாழக்கிழமை 2-3-2017 கூட்டரசு நீதிமன்றதில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ள தனது வாதத்தொகுப்பில் உதயகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.1995 ஆம் ஆண்டு சிறைச்சாலை சட்டம், குற்றவியல் சட்டம் பிரிவு 307 மற்றும் சிறைச் சாலைகளில் கட்டாயம் வழங்கப்பட வேண்டிய ஐ.நாவின் குறைந்த பட்ச உபசரணை முறை மீதான விதிமுறைகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். தாம் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்த காலத்தில் கைதிகள் மிக மோசமாக நடத்தப்பட்டதை கண்கூடாக பார்த்ததை அடிப்படையாகக் கொண்டு பொது நலன் கருதி இந்த வழக்கை தொடுத்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். காஜாங் சிறைச்சாலையில் ஒரு நக வெட்டியை 500 பேர் பகிர்ந்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. முடிவெட்டுவதற்கு ஒரு மிஷினை 500 பேர் பயன்படுத்தும் கொடூ ரம் நிகழ்ந்து வருகிறது. பல் துலக்கும் ஒரு பிரஸ், சிறிய பற்பசை, குளிப்பதற்கு ஒரு சிறு சோப்பு ஆகியவற்றை கைதி கூடத்தில் இருக் கக் கூடிய 4 கைதிகள் பகிர்ந்துகொண்டு, மூன்று மாதம் பயன்படுத்த வேண்டும். காஜாங் சிறைச்சாலையில் இருக் கக் கூடிய மொத்த கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அனுதினமும தோல் வியாதியினால் அவதியுற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அலறித் துடிக் கின்றனர். ஒரு நக வெட்டியை 500 பேர் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் தங்களின் நகங்களை வெட்டிக்கொள்வதற்கு போதுமான கால அளவு இல்லாத நிலையில் அடித்து துன்புறுத்தப்படுகின் றனர். ஒரு முடி வெட்டும் மிஷினை 500 பேர் பயன்படுத்தும் போது, முடி குட்டையாக வெட்டும் சமயத்தில், தலையில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வடிகின்றது. இதில் எய்ட்ஸ் நோய்கொண்ட கைதிகளும் அடங்குவர். இவ்வாறு பயன்படுத்தப்படும்போது கல்லீரல் அழற்சி என்று சொல்லக்கூடிய ஹெப்பர்டைஸ் பி நோய் படுவேகத்தில் கைதிகளிடம் பரவுகின்றது. இதனால் கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் நோய் முற்றியப் பின்னரே சிகிச்சை அளிக்கப்படும் போது மரணங்கள் நிகழ்கின்றன. சுகாதாரமற்ற சூழல் நிகழ்வதால் மூன்றில் ஒரு பகுதி கைதிகள், தோல்வி யாதிக்கு ஆளாகின்றனர். அதிலும் அந்த நோய் மர்ம உறுப்பில் பரவும் போது, கைதிகளின் நிலையை வார்டர்கள் கண்டுகொள்வதே இல்லை. வேதனையை தாங்கிக்கொள்ள முடி யாமல் அலறித் துடிக்கின்றனர். இதில் நம்பிக்கை மோசடி வழங்கில் சம்பந்தப்பட்டு இருந்த வழக்கறிஞர் ஜோன் கொன்சியம் (வயது 49) என் பவர் தன்னுடன் லண்டனில் சட்டக் கல்வி பயின்றவர். அவர் காஜாங் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு மரணம் நிகழ்ந்து இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற கைதிகளுக்கு எவ்வாறு காஜாங் சிறைச்சாலை பாதுகாப்பு அளிக்கப் போகிறது என்று உதயகுமார் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் நிலை குறித்து அவர்கள் வார்டன்களிடம் முறையிட்டால் நானா உங் களை இங்கு வரச்சொன்னேன் என்று தங்களுக்குள் உள்ள பொறுப்பை உணராமலேயே தட்டிக்கழித்து வரு கின்றனர் என்று உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். காஜாங் சிறைச்சாலை மட்டுமல்ல. நாட்டில் உள்ள 35 சிறைச்சாலைகளில் உள்ள கைதி களை பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உதயகுமார் பரிந்துரைத்துள்ளார். * சிறைச்சாலைகளின் நடைமுறையை கண்டறிய அரச விசாரணைக் குழு ஒன்று அமைக் கப்பட வேண்டும். * பொது மக்களை போல நியாயமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். * அதிகாரிகளிடம் பேசும் போது. சிலிப்பரை கழற்றி விட்டு, தரையில் உட்கார்ந்து பேச வேண்டும் என்ற நடை முறைக்குப் பதிலாக அவர்கள் நாற்காலியில் அமர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். * கைதிகளுக்கு ஒரு சீருடை மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த சீருடையை துவைத்து காய வைக்கும் வரையில் நிர்வாணமாக இருக்க வேண்டும். இது தவிர்க்கப் பட்டு மாற்று சீருடை வழங்கப்பட வேண்டும். *10 து 10 அடி அளவை கொண்ட சிறைச்சாலை அறையில் காற்றோட் டம் இல்லை. எந்தவொரு தடுப்பும் இல்லாமல் ஒருவர் அதற்குள்ளே இயற்கை உபாதையை கழிக்க வேண்டும். இது தடுப்பு அறை செய்யப் பட்டு மாற்றி அமைக்கப்பட வேண்டும். *பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் காவல் அறை தூய்மைப்படுத்தப்பட வேண்டும். *கைதிகளுக்கு எளிதாக பரவக்கூடிய காச நோய் கட்டுப்படுத்தப்பட வேண்டும். *கைதிகள் போதைப்பொருள் அல்லது புகையிலையை தங்கள் வசம் கொண்டுள்ளார்களா? என்பதை சோதனை செய்வதற்கு பலரின் முன்னிலையில் ஒவ்வொரு கைதியும் நிர்வாணமாக்கப்பட்டு பிட்டத்தை விரித்துப் பார்த்து சோதனை செய்யும் வார்டன்களின் பாலியல் துன்புறுத்து நிறுத்தப்பட வேண்டும். *நான்கு முறை ஜ.செ.க.வின் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நம்பிக்கை மோசடி வழக்கில் தண்டனை பெற்ற வழக்கறிஞர் குப்புசாமி பலரின் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவரின் பிட்டத்தை சோதனை செய்துள்ளனர். இது போன்ற மனிதாபிமானமற்ற செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். *ஒவ்வொரு நாளும் கைதிகள் பிரம்பினால் அடிக்கப்படுவது, சிறை வளாகத்தை சுற்றி ஓடி வரும்படி பணிப்பது போன்ற சித்ரவதைகள் நிறுத்தப்பட வேண்டும். * பல நாடுகளில் ரத்து செய்யப்பட்ட தூக்குத்தண்டனை நமது நாட்டிலும் ரத்து செய்யப்பட வேண்டும. இது போன்ற கொடுமைகள் கைதிகளுக்கு எதிராக பிரயோகிக்கப்படுவதை காஜாங் சிறைச்சலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு ஒரே தீர்வு அரச விசாரணை ஆணையம் அமைப்பதுதான் என்று கூட்டரசு நீதி மன்றதிற்கு அனுப்பி வைத்துள்ள மனுவில் உதயகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img