வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

பத்துமலை தைப்பூச விழாவின் மொத்த வரவு வெ.லட்சம்!
வியாழன் 02 மார்ச் 2017 13:51:26

img

இவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளி என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலை வர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று அறிவித்தார்.பத்துமலையில் தைப்பூச விழா கடந்த பிப்ரவரி 8,9,10 ஆகிய மூன்று தினங்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா, சீனப் பெருநாள் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் தைப்பூசத் திற்கு முன்பும், முடிந்த பிறகும் பத்துமலைக்கு வருகைத் தந்த பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பத்துமலை தைப்பூச விழா முழுமையாக நிறைவு பெற்ற வேளையில் அதன் வரவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு தேவஸ்தானத்திற்கு உள்ளது. அவ்வகையில் 2017ஆம் ஆண் டின் தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளியாகும். இது கடந்த 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 255 வெள்ளி கூடுதல் வரவாகும். கடந்தாண்டு தைப்பூச விழாவின்வழி தேவஸ்தானத்திற்கு 22 லட்சத்து 89 ஆயிரத்து 548 வெள்ளி வரவு கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். கடை வாடகைகளின் வழி தேவஸ்தானத்திற்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 450 வெள்ளி வரவு கிடைத்துள்ளது.பால்குடம் 190,270 வெள்ளி, அர்ச்சனை 463,727 வெள்ளி, முடி காணிக்கை 76,875, காவடி காணிக்கை 1395 வெள்ளி, காது குத்து 1000 வெள்ளி, உண்டியல் 475,600 வெள்ளி உட்பட 17 அம்சங்களின் வழி தேவஸ்தானத்திற்கு வரவு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். பத்துமலைக்கு செல்ல வேண்டாம், பால்குடம் காணிக்கை செய்ய வேண்டாம், அர்ச்சனை செய்யவேண்டாம் என தேவஸ்தானத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரு சிலரின் தனிப்பட்ட செயல்பாடுகளாகும்.ஆனால் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இதுநாள் வரை குறையவில்லை. ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் லட்சக் கணக்கான பக்தர்கள் பத்துமலைக்கு வருகி ன்றனர். தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக பல அபிவிருத்தி பணிகளை தேவ ஸ்தானம் செய்து வருகிறது. குறிப்பாக நான்காவது படிக் கட்டு கட்டப்பட்டுள்ளது. இரு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பத்துமலை கலை, கலாச்சார மையம் கட்டு வதற்கான பணிகள் தொடங்கும். இவை அனைத்தும் மக்களின் நன்மைக்காக தான் செய்யப் பட்டு வருகிறது. இதுபோன்று பல அபிவிருத்தி பணிகளை செய்ய தேவஸ்தானம் தயாராகவுள்ளது. ஆகவே தேவஸ்தானத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண் டாம் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img