திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

ஜோங் நாமின் உடலை நெருங்கிய உறவினர் மட்டுமே உரிமை கோர முடியும்!
வியாழன் 02 மார்ச் 2017 13:44:30

img

கொலையுண்ட வடகொரி யர் கிம் ஜோங் நாமின் உடலை அவரின் நெருங்கிய உறவினர் மட்டுமே உரிமை கோர முடியும் என அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் வலியுறுத் தியுள்ளார். ஜோங் நாமின் உடல் கோலாலம்பூர் மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. ஜோங் நாமின் நெருங்கிய உற வினர் அம் மருத்துவமனையில் தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத் தின் டிஎன்ஏ (மரபணு) சோதனைக்கு உட்படுத் தப்படுவார். அம்மரபணு மாதிரி உறுதி செய்யப்பட்ட பிறகே ஜோங் நாமின் உடல் சம்பந்தப்பட்டவரி டம் ஒப்படைக் கப்படும். அவ்வுடலைத் தருமாறு வடகொரியத் தூதரகம் தூதுக்குழு உள்ளிட்ட எத்தரப்பின் வேண்டு கோளையும் போலீஸ் ஏற்காது. ஏனெனில் இறந்தவரின் உடலைக் கோருவது தொடர்பில் மலேசியா பொதுசெயல் நடை முறையைக் கொண்டுள்ளது என காலிட் கூறியுள்ளார். வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதர ரான ஜோங் - நாமின் உடலைப் பெறும் வகையில் வட கொரியா மலேசியாவுக்கு தூதுக் குழுவொன்றை அனுப்பியுள்ளது. அது தொடர்பில் பன் னாட்டு ஊடக அறிக்கை குறித்து கருத் துரைத்த காலிட் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். அவ்வழக்கில் ஐயுறப்படும் எழுவரை தேடும் பணி எந் தளவில் உள்ளது எனக் கேட்ட தற்கு, புலனாய்வில் உத வும் வகையில் அந்த எழுவரைத் தேடும் நடவடிக் கையை போலீசார் தொடர்ந்து மேற்கொள் வார்கள் என்று காலிட் கூறியுள் ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img