உலுசிலாங்கூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடுதல் மற்றும் வீடு புகுந்து கொள்ளைய டிக்கும் ஆலோங் கெனாஙா கும்பலைச் சேர்ந்த ஐவரை காவல் துறையினர் கைது செய்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிண்டெண்டன் இரா.சுப்பிர மணியம் தெரிவித்தார். புக்கிட் புருந்தோங் பகுதியில் இயங்கி வந்த இகும்பலைச் சேர்ந்த மூவரை கடந்த22.2.2017 ஆம் நாள் அதிகாலை மணி 2.00 அளவில் இன்ஸ்பெக்டர் முகமட் அமின் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் கைது செய்த னர். தடுப்புக் காவலில் விசார ணைக்காக தடுத்து வைக்கப்பட்ட அவர்கள், ஐந்து வீடு புகுந்து கொள்ளையிடும் செயலில் ஈடு பட்டவர்கள் என்றும் கிடைத்த தகவலின் வழி ஆறு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட் டன. அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் பிடிபட்ட தாகவும், அவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார். மேல் விசார ணைக்குப்பின் 17 கைப்பேசிகள், 12 கைக் கடிகாரங்கள், 2 கேமராக்கள், ஒரு வானொலிப் பெட்டி, ஒரு கைக் கணினி, ஒரு பிரிண்டர், ஒரு டிவிடி, அடகு சூராக்களும் கைப்பற்றப்பட்டன.