img
img

நெகிழிப் பைக்கு விதிக்கப்படும் 20 காசு!
புதன் 01 மார்ச் 2017 12:09:57

img

சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பையை பேரங்காடிகளில் கேட்டுப் பெறும் போது, அதற்கு விதிக்கப்படும் 20 காசு கட் டணம் யார் பைக்குள் செல்கிறது? இந்த 20 காசு விதிப்பின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதில் மாநில மக் கள் மிகுந்த குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கின்றனர். மதிய உணவிற்காக கடைக்குச் சென்று, ஒரு சாப்பாடு பார்சல் என்றதும் உடனே அந்த கடைக்காரர் ஒரு பிளாஸ் டிக் பையை (நெகிழிப்பை) காகிதத்தின் மீது வைத்து அதில் சாதத்தை வைக்கிறார். பிறகு, தனித்தனி பைகளில் குழம்பு, காய்கறிகள், பிறட்டல், பொறியல் என வெவ்வேறு பைகளில் கட்டிக்கொடுப்பார். தோசை வாங்கி னாலும் அப்படித்தான். கெட்டி சட்னி, காரச்சட்னி, சாம்பார் என அங்கும் பைகளின் சாம்ராஜ்யம்தான். அத்தனை பொட்டலங்களையும் வேறொரு பெரிய நெகிழிப் பையில் கட்டி நம்மிடம் கொடுப்பார் அந்த கடைக்காரர். ஆனால், அந்த பைகளுக்கு தனி சார்ஜ் கிடையாது. கடைகளிலிருந்து நாம் கொண்டு வரும் நெகிழிப் பைகள் வீட்டில் குப்பைகளை கட்டுவதற்கும் மற்றத் தேவை களுக்கும் பயன்படுகின்றன. அந்த அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் நமது அன்றாட வாழ்வில் ஒன்றித்து விட்டன. நாம் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வாங்கிச் செல்ல விரும்பும் சாதாரண ஒரு சாப்பாட்டிற்கே இத் தனை பைகள் என்றால், மளிகைக்கடைகள், பேரங்காடிகள், வர்த்தக மையங்களில் பொருட்கள் வாங்கும்போது எத்தனை நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது? அவை இலவசமாகக் கிடைத்தன. ஆனால், இன்று நிலைமை என்ன? பேரங்காடிகளிலும், மற்ற வர்த்தக மையங்களிலும் அந்த பைகளுக்கு 20 காசு என்றும், உணவகங்களில் பாலிஸ்திரின் பொட்டலத்திற்குப் பதிலாக பயன்படுத்தப்படும் எளிதில் மக்கிவிடக் கூடிய பொட்டலங்களுக்கு 20 முதல் 50 காசு வரையிலும் கட்டணம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாடிக்கை யாளர்களுக்கு திண்டாட்டம். கடைக்காரர்களுக்கோ கொண்டாட்டம்தான். காரணம், இதுவரை நெகிழிப் பைகளை இலவச இணைப்பாக கொடுத்து வந்த அவர்கள் அதற்கும் 20 காசு கட்டணம் விதிக்கத் தொடங்கி விட் டனர். இதற்கு பின்னணி என்ன என்று எண்ணத்தோன்றுகிறது. நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த தடை விதிப்பும், கட்டண விதிப்பும் அமலில் இருந்து வரு கிறது. குறிப்பாக, சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டு தொடக்கத்தில் பாலிஸ்திரின் பொட்டலங்கள் மற்றும் நெகி ழிப் பைகளின் பயனீட்டிற்கு முழுமையாகத் தடை விதித்தது. தடை ஒரு புறமிருக்க, கடை உரிமையாளர்கள் நெகிழிப் பைகளுக்கு 20 காசு கட்டணம் வசூலிப்பது மாநில அர சாங்கத்தின் இந்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது என்பதுதான் உண்மை. இதில் யாரோ ஒரு தரப்பு லாப மடைகின்றனர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மலேசியாவின் மக்கள் தொகை சுமார் 3 கோடி ஆகும். நமது நெகிழிப் பைகளின் பயனீடோ ஆண்டுக்கு 5,000 கோடியாகும். இது மணிக்கு சுமார் 10 லட்சம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை நம் நாட்டில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் வாரம் ஒரு நாள் மட்டுமே இது அமலில் இருந்தது. தீபகற்ப மலேசியாவில் இதற்கான முதல் நடவடிக்கையை எடுத்தது பினாங்கு மாநிலம். 2009 ஜூலை முதல் தேதி பேரங்காடிகளிலும் வர்த்தக மையங்களிலும் இந்த ஒரு நாள் அமலாக்கத்தை பினாங்கு கடைபிடித்தது. சபாவிலும் இது அமலில் இருந்தது. பிறகு சிலாங்கூரும், சரவாவில் மிரி, சிபு ஆகிய இடங்களிலும் இது கடை பிடிக்கப்பட்டது. பினாங்கில் முதலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அமலாக்கம் செய்யப்பட்டிருந்த இந்தத் தடை, செவ்வாய், புதன்கிழமைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. சிலாங்கூரில் ஆரம்பத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கு முழுமையாகத் தடை விதித்திருக்கிறது. பசுமை திட்டத்தை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் இத்தடையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதனை அமல்படுத்தியிருந்தாலும் நெகிழிப் பைகளை 20 காசுக்கு விற்பனை செய்வது கண்டனக் குரலை எழுப்பியுள்ளது. நெகிழிப் பொருள்கள், குறிப்பாக நெகிழிப் பைகள் எளிதில் மக்கும் தன்மை உடையவை அல்ல. அவை முழு மையாக மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகுமாம். அவை மக்கும் தருவாயில் அவற்றை உணவென நினைத்து விலங்குகள் உட்கொள்வது உண்டு. இவை ஜீரணமாகாத நிலையில் பல விலங்குகள் மடிந்ததும் உண்டு. இப்படி நெகிழிப் பைகளால் பல்வேறு அபாயங்கள் நிலவுகின்ற சூழலில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நெகிழிப் பைகளுக்கு தடை விதித்தும், அவற் றின் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img