ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவு: பிரபாகரன் சிறந்த மாணவனாகத் தேர்வு!!
புதன் 01 மார்ச் 2017 11:53:40

img

குடும்ப ஏழ்மை காரணமாக 3 ஆண்டுகளாகப் பள்ளி வாசலையே மிதிக்க இயலாத சூழ்நிலையை எதிர்நோக்கி வந்த பிரபாகரன் த/பெ சுப்பிரமணியம் எஸ்.டி.பி.எம் தேர்வில் 5ஏ பெற்று நெகிரி மாநிலத்திலேயே சிறந்த மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மந்தின், ஸ்ரீமாவார் குடியிருப்புப் பகுதியில் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதால் வறுமையான நிலையில் பிரபாகரனால் கல்வியைத் தொடர இயலவில்லை. இருப்பினும், பல நல்ல உள்ளங்களின் தூண்டுதலின் காரணமாக மீண்டும் 3ஆம் படிவத்தில் சேர்ந்து நெகிரி செம்பிலான் பட்டதாரிக் கழ கம் நடத்தும் பகுதிநேர வகுப்பிலும் பங்கேற்று கல்வியை மந்தின் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்துள்ளார். அயரா உழைப்பு மற்றும் விடாமுயற்சி கார ணமாக எஸ்.டி.பி.எம் தேர்வில் 5ஏ பெற்று சிறப்புத் தேர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இதனிடையே, சிகாமட் துவாங்கு டூரா இடைநிலைப் பள்ளி மாணவி லீலா குணசேகரன் 4ஏவும் ரந்தாவ் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த கோமதி ராமன் 4ஏவும் கெத்தீஸ்வரி செல்வராஜூ 3ஏவும் தம்பினைச் சேர்ந்த பனிமலர் அறிவானந்தன் 3ஏயும் பகாவ் டத்தோ மன்சோர் இடைநிலைப் பள்ளி மாண வியான சஸ்வீணி இராஜேந்திரன் 3 ஏவும் கேஜிவி இடைநிலைப் பள்ளி மாணவியான மித்ராதேவி குமார் 3 ஏவும் சுரேக்கா, தர்ஷினி, அஸ்வினி, ஜீவன், பர்வீன், ஆகியோர் 3ஏவும் பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் இந்தியர் பட்டதாரி கழகம் ஏழ்மையான மாணவர்களுக்கு லோபாக் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்படும் பகுதிநேர வகுப்பில் கல்வி பயின்ற 127 இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 110 பேர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதி பெற்றி ருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முனைவர் டாக்டர் மு.பழனி தெரிவித்தார். 565 மாணவர்கள் முழு தேர்ச்சி! கடந்த வருட எஸ்டிபிஎம் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 565 தேர்வு எழுதிய மாணவர்கள் அடைவுநிலையில் 4.0 பெற்று முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டினைக் காட்டிலும் இம்முறை அதிகமான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினை அடைந்துள்ளதாக மலேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் முஸ்தாபா தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு, மொத்தம் 335 மாணவர்கள் மட்டுமே முழு தேர்ச்சிப் பெற்றிருந்தனர். மேலும், குறைந்தபட்ச அடைவுநிலையான 3.0 பெற்ற மாணவர்கள் மொத்தம் 16,263 பேர் என அவர் அறிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 14,263 பேராக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டுக்கான முடிவில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இன்று தெரி வித்தார். அதோடு, 2.75 மேல் புள்ளிகளை எடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொது பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறக்கூடிய வாய்ப்பு மாண வர்களுக்கு அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மேலும் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img