வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

வாக்குக்கு மட்டுமே வாசல்தேடி வருகின்றனர்!
திங்கள் 27 பிப்ரவரி 2017 13:01:05

img

நான்கு பொதுத் தேர்தல் கடந்து விட்ட நிலையில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வாக்கு வேட்டையாட வரு பவர்கள் ‘உங்கள் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’ என்று சொல்லி விட்டுச் செல்வார்கள். பிறகு எட்டியே பார்க்க மாட்டார்கள். கடந்த 20 ஆண்டுகளாக விஷப் பாம்புகளுடனும், பூரான், பூச்சிகளுடனும் ஓட்டை வீடுகளில் சின்ன பிள்ளை களை வைத்துக் கொண்டு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கம்போங் டிபிஐ குடியிருப்பாளர் களின் நிலப் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு என்பது அவர்களின் ஏக்கப் பார்வையில் வெளியிடப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்க நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்று 2009ஆம் ஆண்டில் பேரா மந்திரி புசார் வெளியிட்ட அறிக்கை உண்மை என்றால் இப்பகுதியில் குடியிருக் கும் சுமார் 120 குடும்பங்கள் இதே பகுதியில் நிலமோ அல்லது வீடுகளோ கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர். நேற்று கம்போங் டிபிஐ பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதோடு காலி நிலங்களில் முருங்கை மரங் கள் நடும் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வையொட்டி இப்பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத நிலப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பினார்கள். எங்களுக்கு இதே பகுதியில் நிலம் வேண்டும் அல்லது வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். புந்தோங் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று 2008 ஆம் ஆண்டு பேரா தேசிய முன்னணி அரசு அறிவித்திருந்ததே தவிர இதுநாள் வரையில் அந்த வாக்குறுதி முழு மையாக நிறைவேற்றப்படவில்லை. கம்போங் டிபிஐ மக்களுக்கு மலிவு விலை வீடுகள் கட்டுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டது என் றாலும் காரணங்கள் எதுவும் கூறாமல் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இப்பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. எங்களுக்காக சட்ட மன்றத்தில் பேசக்கூட யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கின்றனர். இந்தியர்களுக்காக குரல் கொடுக்கின்ற மஇகாவும் மௌனம் சாதிக்கின்ற போக்கு வேதனையை அதிகரிக்கிறது. எங்களின் துயரமான வாழ்க்கையை ஒரு முறை நேரில்வந்து பாருங்கள், உங்களுக்கு புரியும் என்று கூறி னார்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img