வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

கொத்தடிமைகளாக்கப்பட்ட இந்திய சிறார்கள்.
திங்கள் 27 பிப்ரவரி 2017 12:53:16

img

பெங்காலான் உலு கம்போங் தாசேக் பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்ப ட்டிருந்த ஐந்து இந்திய சிறார்கள் உட்பட 18 பேரை பேரா போலீசார் மீட்டுள்ள வேளையில் இதற்கு காரண மான வர்கள் என்று சந்தேகிக்கப்படும் இந்திய தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பேரா குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் டத்தோ கான் தியான் கீ கூறினார். பொது மக்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பேரா போலீஸ் படையின் டி7 பிரிவு மேற்கொண்ட புலன் விசார ணையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார். நேற்று அதிகாலையில் சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்தின் வீட்டில் புகுந்து அதிரடி சோதனை மேற் கொண்டதில் மொத்தம் 18 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று கூறினார். 27 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட 11 இந்திய ஆடவர்களும், பெண்களும் மீட்கப்பட்டனர். 13 வய துக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு இளைஞர்கள், 2 வயதுக்கும் 7 வயதுக்கும் இடைப்பட்ட இந்திய சிறுவர்கள் இந்த அதிரடி சோதனையில் மீட்கப்பட்டனர் என்று கூறினார். சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். மீட்கப்பட்ட இவர்களில் ஒருவர் எங்களுக்கு சம்பளம் எதுவும் கொடுப்பதில்லை. சம்பளம் கேட்டால் அடிக்கிறார்கள் சிறுவர்களும் வேலை செய்ய மிரட்டப்படு கின்றனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஆள் கடத்தல் சிறார்கள் விற்பனை குற் றச்சாட்டின் அடிப்படையில் 44 வயது 27 வயது கொண்ட இந்திய தம்பதியர் இருவரை போலீசார் மேல் விசா ரணைக்காக தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் லோரி, கார், அடையாள அட்டைகள், குறிப்பு புத்தகம், வர்த்தக லைசென்ஸ், பிறப்புப் பத்திரம், தற்காலிக அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஜொகூர், நெகிரி செம்பிலான் பகு தியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். போலீசார் தங்களின் புலன் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img