வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

கோழி இறைச்சிக் கூடம் சுகாதாரத்திற்கு கேடு!
ஞாயிறு 26 பிப்ரவரி 2017 12:25:12

img

செலாயாங் சந்தைப் பகுதியில் விரைவில் கோழி அறுப்பு கொட் டகை அமைக்கப்படுவது குறித்து இங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எல் லாவற்றிற் கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். அதனையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இங்கு கோழி இறைச்சிக் கூடம் அமைப்பதற்கு கோலா லம்பூர் மாநகர் மன்றம் அனுமதி தந்தது அநியாயம் என்று பத்து மலை மக்கள் நலன் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் ஜெயராமன் பொங்கி எழுந்துள்ளார். அவசரப் பட்டு இங்கு இந்த கோழி அறுப்பு மையம் அமைக்கப்படுமானால் அதனால் மக்களுக்கு ஏற்படக் கூடிய சுகாதாரக் கேடுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். வருமுன் காப்பதே மேல். மற்ற நாடுகளில் இதுபோன்ற தவறுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நமக்கு ஒரு படிப்பினையாக அமையட்டும். 30க்கும் மேற்பட்ட இங்குள்ள அரசு சாரா அமைப்புகள் நேற்று ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தங் களின் ஆட்சேபத்தினையும் எதிர்ப் பினையும் வலுவாக வெளிப் படுத்தினர். எங்களின் உரிமைகள் மீது கை வைக்காதீர். தற்போது நிலவும் உகந்த சுகாதார நிலையினை நாசமாக்கிவிடாதீர் என்ற கோஷம் எழுந்தது. பொதுமக்களின் சுகா தாரத்திற்கு ஊறுவிளை விக்கும் இந்த திட்டம் உடனடி யாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இங் குள்ள மக்கள் ஒரு சேர முழங்கினர். இத்தகைய மையம் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் புழுக்களும் பூச்சிகளும் வசிக்கும் இடங்களாக விளங்கும். பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து உண்டு. துர்நாற்றத்திற்கு சொல்லவே வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் மாசுபடும். நச்சு கிருமி நர்த்தனம் புரியும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளா கும். வாந்தி பேதி மற்றும் வாய்ப் புண் நோய் வரவும் வாய்ப்பு உண்டு என்று இந்த அரசு சாரா அமைப்புகள் எச்சரித்துள்ளன. இறுதியாக இதனால் பறவைக் காய்ச்சல் தொற்றும் அபாயமும் உள்ளது. ஏற்கெனவே, இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பத்து ஆண்டு காலமாக பரிகாரம் காணாமல் இருக்கிறது. இந்த திட்டம் நிலை மையினை மேலும் மோசமாக்கும். போதிய கார் நிறுத்துமிடம் இல்லாமல் இங்குள்ள மக்கள் மத்தியில் போட்டா போட்டி. கண்ட கண்ட இடத்தில் காரை நிறுத்தி விட்டு செல்லுதல், சமயங்களில் இது விபத்துகளுக்கும் வித்திடு கிறது. லைசென்ஸ் இல்லாமல் அந்நிய நாட்டு வியாபாரிகளின் தொந்தரவும் இடையூறும் ஒரு பக்கம். புதுத்திட்டம் வம்பை விலைக்கு வாங்குவது போல. டத்தின் படுகா கதிஜா சுலைமான், செலாயாங் கலை கலாச்சார சங்கத் தலைவர் பரிமளா கிருஷ்ணசாமி செலாயாங் பாரு ருக்குன் தெத்தாங்கா தலைவர் ஹென்றி சந்தானம் ஆகியோர் இந்த ஆட்சேபக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img