ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

சில வாரங்களில் பலமடங்கு விலையேற்றம்!
ஞாயிறு 26 பிப்ரவரி 2017 11:57:53

img

கடந்த சில வாரங்களாக பல தரப்பட்ட அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் விலைவாசி உயர்வை தாங்கிக்கொள்ள சக்தியற்றவர்களாக மக்கள் தத்தளித்து வருகின்றனர். மீன், இறைச்சி, காய்கறிகள், சமையல் பொருட்கள், எரிவாயு போன்றவை கண்மூடித்தனமாக விலை உயர்த்தப்பட்டு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருப்பதை நண்பன் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. வெ. 26.60 க்கு விற்பனை செய்யப்பட்ட 14 கிலோ எடைகொண்ட எரிவாயுத் தோம்பு, தற்போது 30 வெள்ளி முதல் 32 வெள்ளி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ முதல் 5 கிலோ வரையிலான சமை யல் எண்ணெய் 39 முதல் 61 விழுக்காடு வரையில் உயர்வு கண்டுள்ளது. மீன், இறைச்சி, காய்கறிகள் சராசரி 30 விழுக்காடு முதல் 55 விழுக்காடு வரையில் விலை உயர்வு கண் டுள்ளன. இது பயனீட்டாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என்பதுடன் பெரும் சுமையையும் தந்துள்ளது என்பதை கோலாலம்பூர் மாநகர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நண்பன் குழு மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. ஒரு கிலோ வெ. 12 முதல் வெ. 14 வரையில் விற்பனை செய்யப்பட்ட ஈக்கான் கெம்போங் மீன் வகை தற் போது வெ. 18 முதல் வெ. 22 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெ. 32 முதல் 38 வரையில் விற் பனை செய்யப்பட்ட பெரிய ஊடான் தற்போது வெ. 42 முதல் வெ. 52 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெ. 4 க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோஸ் தற்போது கிலோவிற்கு வெ. 6 முதல் வெ. 7 வரை யில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு வெ. 36 ஆக விற்பனை செய்யப்பட்ட சிவப்பு மீன், தற்போது வெ. 40 முதல் வெ.42 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு வெ. 12 வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளைப்பூண்டு தற்போது வெ. 15 வரையில் எகிறி யுள்ளது. நாட்டாடு இறைச்சி வெ. 36 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வெ. 42 வரையில் விலை உயர்ந்துள்ளது. சிவப்பு மிளகாய் கிலோவிற்கு வெ. 20 வெள்ளி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கடை மற்றும் மார்க்கெட் உரிமையாளர்களிடம் கேட்ட போது, கடந்த பிப்ரவரி முதல் தேதியிலி ருந்து பெட்ரோல், டீசல் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொருட்களின் விலையை உயர்த்த வேண் டிய இக்கட்டான நிலையில் தாங்கள் இருப்பதாக குறிப்பிட்டனர். 'Harga petrol, diesel naik, harga barang-barang naik' என்று வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து பெட்ரோல் விலை ரோன் 95 வகை 20 காசு உயர்த்தப்பட்டு லிட்டருக்கு வெ. 2.30 என அறி விக்கப்பட்டது. அதேபோல டீசல் விலை 20 காசு உயர்த்தப்பட்டு லிட்டருக்கு வெ. 2.15 அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து செலவினம் உயர்ந்து இருப்பதாக காரணம் காட்டி அனைத்து வகையான பொருட்களின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர். அவர்கள் கொடுக் கின்ற விலையை அடிப்படையாக கொண்டே சற்று விலை கூடுதலாக தாங்களும் விற்க வேண்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு இல்லையென்றால் விலைகள் பழையப்படியே நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் என்று அவர்கள் காரணம் கூறுகின்றனர். எனினும் இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்பதை பலர் ஒப்புக்கொள்கின்றனர். பங்சாரைச் சேர்ந்த கமலா ஆறுமுகம் கூறுகையில், முன்பு வாரத்திற்கு ஒரு நாள் 150 வெள்ளி எடுத்துச்சென் றால் காய்கறி, இறைச்சி போன்ற பொருட்களை வாங்கி விடலாம். தற்போது 250 வெள்ளி முதல் 300 வெள்ளி வரையில் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்றார். கடந்த டிசம்பர், இவ்வாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். இந்த விலை உயர்வை அவசியம் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் செராஸைச் சேர்ந்த மா. முத்துசாமி. ஏனெனில் இதனை அரசாங்கம் உடனடியாக கவனிக் கவில்லை என்றால் பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தொடர்ந்து பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். முதலில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img