சனி 16, பிப்ரவரி 2019  
img
img

ஜொகூர் சுல்தானும் துன் மகாதீரும் நாட்டின் சொத்துக்கள்!
சனி 25 பிப்ரவரி 2017 13:33:28

img

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் ஜொகூர் சுல்தான் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரும் நாட்டின் பிரதான சொத்துக்கள் ஆவர். மலேசியாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக துன் மகாதீர் பாடுபடுகிறார். ஜொகூரிலும் அவ்வாறு நிகழ வேண்டும் என்று ஜொகூர் சுல்தான் விரும்புகிறார். எனவே இருவருமே ஒரே நோக்கத்தை முன்நிறுத்தி செயல்படுகின்றனர் என்று அர்மடா பெர்சத்து அமைப்பின் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இவ்விரு தலைவர்களும் நாட்டின் பிரதான சொத்துக்கள், வளங்கள் ஆவர். எனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் ஜொகூர் மாநில விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் ஜொகூர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி பிளவையும் பிரிவினையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று நேற்று முன்தினம் ஜொகூர் சுல்தான் எச்சரித்து இருப்பதை மேற்கோள்காட்டி சையிட் சாடிக் மேற்கண்டவாறு கூறினார். துன் மகாதீரால் ஒரு காலத்தில் வழிநடத்தப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள் தவறான தகவலை சுல்தானுக்கு வழங்கியிருக்கக்கூடும். அவர்கள் வஞ்சகமாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் பார்வையாகவும் சிந்தனையாகவும் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் சட்டத்தை துரிதமாக கொண்டு வந்தவர் துன் மகாதீர். அதுபோலவே உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியவர் துன் மகாதீர். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பலவீனமாக்கியவர் துன் மகாதீர் என்ற ஒரு தோற்றம் இருந்த போதிலும் தாம் துன் மகாதீருக்காக வாதாடவில்லை என்பதையும் சையிட் சாடிக் தெளிவுபடுத்தினார். ஆனால், துன் மகாதீரின் தியாகத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஆசிய நாடுகள் மத்தியில் ஒரு மதிப்பு வாய்ந்த நாடாக மலேசியாவின் தோற்றத்தை மாற்றிக் காட்டியவர் துன் மகாதீர் என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அவருடைய காலத்தில் நிறைய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு மிகப்பெரிய மேம்பாட்டை நாட்டில் உருவாக்கியது. ஒரு விவசாய நாடாக இருந்த மலேசியாவை பொருளாதார உற்பத்தித்திறன் மிக்க நாடாக உருவாக்கினார். ஏழ்மையும் கல்லாமையும் நிறைந்த ஒரு நாடாக இருந்த மலேசியாவை வரையற்ற நிலையில் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி மதிக்கக்கூடிய சமூகமாக மலேசியர்களை உருவாக்கினார். அவரின் துணிச்சல்தான், ஒரு வரலாற்று வல்லுநரை போல அவர் எல்லா விஷயங்களிலும் தெளிந்த நீரோடையைப் போல் திகழ்ந்தார். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. ஆனால், முதுமைக்குரிய அடையாளத்திலிருந்து விடுபட்ட நிலையில் அவரின் துணிச்சலான செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. அவர் நினைத்து இருந்தால் பதவி ஓய்வுக்குப் பிறகும் கடுமையான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு, அச்சுறுத்தல்களை தவிர்த்து சொகுசான வாழ்க்கையை தேடிக்கொண்டு இருந்து இருக்கலாம். ஆனால், 92 வயதிலும் மலேசியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேட்கையில் பல போராட்டங்களுடன் ஒரு கடுமையான நெருக்கடியை தேர்வு செய்து நாட்டின் கௌரவத்திற்காக போராடிக் கொண்டு இருக்கிறார் என்று சையிட் சாடிக் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img