img
img

இரு இந்திய சகோதரர்களுக்கான தூக்குத் தண்டனை!
சனி 25 பிப்ரவரி 2017 13:19:05

img

கொலைக்குற்றத்திற்காக இரு இந்திய சகோதரர்களுக்கு நேற்று அதிகாலையில் நிறைவேற்றப்பட விருந்த தூக்குத்தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு கோரி, நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிரிடம் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுந்தர் த/பெ பத்துமலை (வயது 40), பி. ரமேஷ் த/பெ பத்துமலை (வயது 45) ஆகிய இருவருக்கும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று காஜாங் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை ஒத்திவைக்குமாறு தங்கள் வழக்கறிஞர் பி. உதயக்குமார் மூலமாக நெகிரி சமஸ்தானாதிபதியிடம் கடந்த வியாழக்கிழமை காலையில் முறையிட்டுள்ளனர். சமஸ் தானாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் நகல், காஜாங் சிறைச்சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைக்குமாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட் டிருந்தது. எனினும் வியாழக்கிழமை மாலை வரையில் எந்தவொரு பதிலும் வரவில்லை.எனவே சிறைச்சாலை நிர்வாகம் நிர்ணயித்து இருந்த தேதிக்கு ஏற்ப நேற்று வெள்ளிக்கிழமை அந்த இரு சகோதரர்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். எனினும் அந்த இரு சகோதரர்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை அவர் களின் சகோதரி உமா முத்துக்கிருஷ்ணன் மலேசிய கினியிடம் உறுதிப்படுத்தினார். நெகிரி சமஸ்தானாதிபதியிடம் பொது மன்னிப்பு கோரி தனது 70 வயது தாயாரும் தனது அண்ணனும் செய்து கொண்ட முறையீட்டினால் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை காஜாங் சிறைச்சாலை அதி காரி ஒருவர் தங்களிடம் தெரியப்படுத்தியதாக உமா முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார். தூக்குத் தண்டனைக்கு பதிலாக எளிய தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்குமாறு தாங்கள் கோரி யிருந்ததாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கும் பின் னிரவு 12.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெகிரி செம்பிலான், மம்பாவ், போர்ட்டிக்சனை நோக்கி செல் லும் ஜாலான் லாபு, 19 ஆவது கிலோமீட்டரில் கிருஷ்ணன் த/பெ ராமன் (வயது 35) என்பவரை காருக் குள்ளேயே வெட்டிக்கொன்றதாக அவ்விரு சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் பண்டார் ஸ்பிரிங் ஹில்லை சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கூட்டரசு நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது. கடந்த 10 ஆண்டு காலமாக சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வந்ததே அந்த சகோதரர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய தண்டனையாகும். தாங்கள் புரிந்த குற்றத்திற்காக அவர்கள் மிகவும் வருந்துகின்றனர். மிக குறுகிய இடத்தில் இரும்புக்கம்பிக்கு பின்னால் நாள் ஒன்றுக்கு 23 மணி நேரம் அவர்கள் தண்டனையை அனுபவித்தனர். ஒரு மணி நேரம் மட்டுமே அவர்கள் இளைப்பாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் காற்றோட்டமே இல்லாத இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் கருணை மனுவில் உதயக்குமார் குறிப்பிட்டு இருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img