செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டடம்! விரைவில் கட்டப்படும்!
வெள்ளி 24 பிப்ரவரி 2017 12:10:32

img

கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டடம் மிக விரைவில் கட்டப்படும் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் நேற்று கூறினார். கின்றாரா தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டடம் கட்டுவதற்கு அரசாங்கம் 35 லட்சம் வெள்ளியை ஒதுக்கும் என்று இப்பள்ளிக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித் திருந்தார்.இவ்வேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இணைக் கட்டடம் 20 லட்சம் வெள்ளியை கட்டு வதற்கான ஒப்பந்தம் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.முதல் கட்டமாக கிடைத்த 2 லட்சம் நிதியை கொண்டு மேம்பாட்டு நிறுவனத்தினர் இணைக் கட்டடத்தின் அஸ்திவாரத்தை அமைத்தனர். ஆனால் அதன் பின் இக்கட்டடம் கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட நகரவில்லை. கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இப்பிரச்சினை இரண்டு நாட்களுக்கு முன் மலேசிய நண்பன் தலைப்பு செய்தியாக வெளிவந்தது.உடனே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மேம்பாட்டு நிறுவனம், கட்டட வல்லுநர்களுடன் சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நேற்று நடத்தினேன். கெந்திங் பெர்ஹாட்டின் கீழ் செயல்படும் செஸ் கம்மூனிட்டி தான் இப்பள்ளியின் இணைக் கட்டடம் கட்ட 20 லட்சம் வெள்ளியை வழங்க வேண்டும்.முதலில் கட்டுங்கள் பின் பணத்தை தருகிறோம் என்று செஸ் கம்மூனிட்டி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். பணம் கிடைக்காத நிலையில் இணைக் கட்டடத்தின் கட்டுமான பணிகளை மேம்பாட்டு நிறுவனத்தினர் தொடர வில்லை. ஆகவே இவ்விவகாரத்தில் மேம்பாட்டு நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் என யாரையும் நாம் குறை கூற முடியாது என்று டத்தோ டி. மோகன் கூறினார். 2 ஆண்டுகளுக்கு முன் 20 லட்சம் வெள்ளியில் இக்கட்டடத்தை கட்டி முடிக்க முடியும் என்று மேம்பாட்டு நிறு வனத்தினர் கூறினர்.ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அது சாத்தியமாகாது. தற்போது 28 லட் சம் வெள்ளி தேவைப்படுகிறது. இந்நிதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறிவித்தப்படி கட்டுமானத்திற்கான நிதியை வழங்காதது அரசாங்கத்தின் தவறாகும். ஆகையால் இக்கட்டுமான பணிக்கான செலவு அதிகரித்துள்ளதற்கு மேம்பாட்டு நிறுவனத்தை சாடுவதில் நியாயம் அல்ல.அதே வேளை யில் கட்டுமான செலவில் கூடுதலாக வரும் 8 லட்சம் வெள்ளியை பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங் கத்தை தேடச் சொல்வதும் அநாகரீக செயலாகும். ஆகவே வாக்குறுதியின் அடிப்படையின் அரசாங்கம் இப்பள்ளியின் இணைக் கட்டடத்திற்கான நிதியை உடன டியாக வழங்க வேண்டும்.இவ்விவகாரம் தொடர்பில் இன்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிர மணியம், கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன், பிரதமர் இலாகா அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளேன். அதே வேளையில் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றையும் அத்தரப்பினரிடம் வழங்குவேன்.ஆகவே இப்பள்ளியின் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று டத்தோ டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே கின்றாரா தமிழ்ப்பள்ளியில் எழுந்துள்ள பிரச்சினையை தலைப்பு செய்தியாக வெளியிட்ட மலேசிய நண்பன் நாளிதழுக்கு இவ்வேளையில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சில விஷயங்கள் பத்திரிகைகளில் அடித்தால் தான் அதற்கான வேலைகள் விரைவில் தொடங்குகின்றனர். அதற்காக பத்திரிகைகளில் அடிக்கும் வரை எந்தவொரு தரப்பினரும் காத்திருக்கக் கூடாது என்று மோகன் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img