திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் மக்களுக்கு செலவிடப்பட்டதா?
வியாழன் 23 பிப்ரவரி 2017 12:01:23

img

பேரா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ இளங்கோ சிறப்பாக செயல்படுகிறாரா என்பது கேள்வி அல்ல. பேரா மாநில இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களை களைய வேண்டிய மாநில மந்திரி புசாரின் வருடாந்திர மானியத்தை இந்தியர்களுக்கு எவ்வாறு செலவிடப்பட்டது, அது ஏழை இந்திய மக்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற மலேசிய நண்பனின் கேள்விக்கு வெளிப்படையான பதிலை தராதது ஏன் என்பது தான் தற்போதைய வாதமாகும். பேரா மாநில மஇகாவின் செயல்பாடுகள் குறித்து கடந்த இரண்டு வாரங்களாக பேரா மாநில இந்தியர்களின் நலன் கருதி மாநில அரசாங்கம் 2016ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வழி ஒதுக்கீடு செய்திருந்தும் பேரா மாநில இந்திய மாணவர் களின் கல்வி மேம்பாட்டு நிதியான ரிம. 10 லட்சம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டு நிதியான ரிம.500,000 (ரிம 5 லட்சம்) ஆக மொத்தம் ரிம 15 லட்சத்திற்கான செயல்பாடு களைப் பற்றியும், மானியங் களைப் பகிர்ந்தளிக்கப்பட்டு நன்மை பெற்றவர்களின் விவரங் களையும் மிகவும் எளிமையான கேள்விகளின்வழி நண்பன் குழு கேட்டிருந்த சூழலில் இன்று வரை நேரடியான பதிலையோ அல்லது விவரங் களையோ அதிகாரப்பூர்வ மாக வழங்காதது பேரா மஇகாவின் ’தில்லாலங்கடி’ அரசியலின் உச்சம் என்பதை நிரூபிப்பதாகவே பேரா மாநில இந்திய வாக்காளர்கள் கருதுகின்றனர். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதா? பேரா மாநில மஇகாவின் தலைவர் டத்தோ இளங்கோ வடிவேலு சிறப்பாகச் செயல்படுகின்றாரா? என்பது நண்பன் குழுவின் கேள்வியல்ல பேரா மாநில மஇகாவின் தலைவரோடு 24 தொகுதித் தலைவர்களும், ஏறக்குறைய 700 கிளைத் தலைவர்களும் அரசியல் நெறிகளோடு சேவையாற்ற வேண்டும் என்பதே நண்பன் குழுவின் ஆதங்கம். தொகுதித் தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களும் மாநிலத் தலைவரும் மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்ற அறிக்கை மட்டும் சான்றிதழாக அமைந்துவிடாது. மாறாக பேரா மாநில இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களைக் களைய வேண்டிய மந்திரிபுசாரின் ஆண்டு நிதி தொடர்பில், எண்ணிக்கையை உட்படுத்திய கேள்விகளுக்கு முழுமையான வெளிப்படையான பதில்களைத் தராதது சிறந்த சேவைக்கான சான்றிதழாக அமைந்து விடாது என்பதை பேரா மாநில இந்தியர்களால் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். நண்பன் குழு இதுவரையிலும் இளங்கோ வடிவேலுவிடம் கேட்டிருந்த கேள்விகளான; 2016 ஆம் ஆண்டு மாநில நிதியிலிருந்து; * பயன்பெற்றுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்? * பயன்பெற்றிருக்கும் இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என்ன? * மேம்பாட்டு மானியங்களைப் பெற்றிருக்கும் அரசு சாரா இயக்கங்கள் யாவை? *தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் பயன்பாடு என்ன? * சமூகப் பொருளாதார நிதி தொகுதி வாரியாக வழங்கப்பட்டதன் பட்டியல் எங்கே? * பேரா மாநில அரசாங்க உபகாரச் சம்பளங்களைப் பெற்றிருக்கும் இந்திய மாணவர்கள் எத்தனை பேர்? மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தருவதற்குப் பதிலாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையிலான செயல்பாடுகளை நண்பன் குழு வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றது. டத்தோ இளங்கோவின் செயல்பாடுகள்; * மாநில அரசாங்க மானியங்களை பகிர்ந்தளிப்பதில் முறையான அணுகுமுறைகள் இல்லை! * வந்தால் தருவோம்! கேட்டால் கொடுப்போம் எனும் ஜப்பானிய கால நிர்வாகத்தில் மாற்றமே இல்லையா? * பேரா மாநில மந்திரிபுசார் அலுவலகத்தின் வழி மானியம் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் பட்சத்தில் எண்ணிக்கை ஏன் தரப்படவில்லை. * ரிம. 750ஐ மின்சாரக் கட்டணமாக கொடுத்தால் மாநிலம் முழுவதும் உள்ளவர்களின் குறைகள் தீர்க்கப்படுமா? * 2016ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வில் 8 ஏக்களுக்கும் மேல் பெற்றவர்களுக்கான சாதனை விழா நடத்தப்பட வில்லையே ஏன்? * 2016-ஆம் ஆண்டில் பேரா மாநிலத்தில் இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்களுக்கான திட்டங்களுக்கு மானிய ஒதுக்கீடு இல்லையா ஏன்? * ரிம. 10 மில்லியன் தொகையில் 2016ஆம் ஆண்டில் செயல்படுத்திய திட்டங்கள்தான் என்ன? நியாயமான பதில்களே தேவை இரண்டு வாரங்களாகியும் நண்பன் குழு பேரா மாநில இந்தியர்கள் நலன் கருதியும், தேசிய முன் னணியின் சரியான இலக்கினைக் கருதியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுப் பான பதில் களை இன்றுவரை வழங்கவில்லை என்பது மஇகா வின் பலவீனத்தையும் தலை மைத்துவத்தின் இயலாமை யையும், மட்டுமே பிரதிபலிப் பதை உணராமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளி யிடுவது தேசிய முன்னணியின் மீதிலான பேரா மாநில இந்தியர்களின் நம்பிக்கையைத் சிதைத்து விடாதா? நண்பன் குழுவைப் பொறுத்தவரையில் கேட்கப்படும் கேள்விகள் நேரடியானவை! அரசியல் வில்லங்கம் எதுவுமே இதில் இல்லை! எனவே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் சாமர்த் தியமான வேலையை மஇகா விட்டு விட்டு விரைவில் சரியான பதில்களைத் தர வேண்டும் என நண்பன் குழு கேட்டுக் கொள்கின்றது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img