வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

கமல்–சுப்பிரமணிய சாமி மோதல்!
திங்கள் 20 பிப்ரவரி 2017 12:37:16

img

சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் கமல் ஹாஸனை, 'முதுகெலும்பில்லாத முட்டாள்' என்று ட்விட்டரில் திட்டியுள்ளார் சுப்பிரமணிய சாமி. ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் தமிழர்களை 'பொறுக்கிகள்' எனத் தொடர்ந்து திட்டி வந்தார் சு சாமி. இதைக் கண்டித்து ட்விட் போட்டிருந்தார் கமல் ஹாஸன். பதிலுக்கு கமல் ஹாஸனையும் 'பொர்க்கி' என்று குறிப் பிட்டார் சாமி. இதற்கு பதிலளித்த கமல், 'சாமியின் கேவலமான பதிவுகளுக்கு பதில் தர விரும்பவில்லை. காம ராஜ், அண்ணா & ராஜாஜி எல்லாம் நீ சொன்ன 'பொர்க்கி' இனத்தில் இணையற்ற தலைவர்கள். மோதி மிதித்து விடு பாப்பா..' என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும் கமலை வம்புக்கு இழுத்துள்ளார் சு சாமி. அவரது ட்விட்டரில் ஒருவர், "எப்படியாவது கமல் ஹாஸனை சமாதானப்படுத்தி பாஜகவில் இணைத்துவிடுங்கள்.அவரைப் போன்ற ஒருவர் அக்கட்சிக்குத் தேவை", என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சு சாமி, "எனக்கு பாஜக பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கமல் ஹாஸன் என்ற முதுகெலும்பில்லாத கோழையை, சுயதம்பட்ட முட்டாளை கடுமையாக எதிர்க்கிறேன்," என்று கூறியுள்ளார். சு சாமியின் இந்த பதில் கட்சி பேதம் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img