புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

மாணவி பலாத்காரம்!
சனி 18 பிப்ரவரி 2017 11:44:31

img

இருவேறு தருணங்களில் ஆரம்பப் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் ஆரம்பப் பள் ளியைச் சேர்ந்த உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் ஒருவருக்கு இங்குள்ள செலாயாங் செஷ ன்ஸ் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டன. கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி11 வயதாக இருந்த அந்தச் சிறு மியை, 38 வயதுடைய முகமட் எஷ்லி அஸ்ரம் என்ற அந்த ஆசிரியர் தன்னுடைய இல்லத் தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத் தியுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதே வீட்டில் மீண்டும் அந்த சிறுமியை பாலியல் பலாத் காரத்திற்கு உள்ளாக்கியதாக அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டின் பேரில் 12 ஆண்டுச் சிறையும் ஆறு பிரம் படிகளும் கொடுக்க நீதிபதி தஸ் னிம் அபு பக்கார் உத்தர விட்டார். ஆசிரியருக்கு எதிரான இந்த வழக்கில், நியாயமான சந் தேகங்களை ஏற்படுத்த எதிர்த்தரப்பு தவறிவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையைத் தற்காலிகமாக நீதிமன்றம் ஒத்திவைத்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கருணை காட்டும்படி அவரது வழக்கறிஞர் விடுத்த கோரி க்கை பற்றி கருத்து ரைத்த நீதிபதி தஸ்னிம், ஓர் ஆசிரியர் என்ற முறையில் ஒரு மாண வியை பாதுகாக்க வேண்டுமே தவிர இது போன்ற அடாத காரியத்தைப் புரிந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img