img
img

தடுப்புக் காவல் மரணங்களுக்கு முடிவே இல்லையா?
வெள்ளி 17 பிப்ரவரி 2017 12:08:25

img

நாட்டில் தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்வது தொடர்பில் கலந்து பேசுவதற்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியைச் சந்திக்க ஜனநாயக செயல்கட்சி (ஜசெக) விரும்புகிறது. ஆகக் கடைசியாக தடுப்புக் காவலில் இருந்த எஸ்.பால முருகன் (வயது 44) கடந்த வாரம் உயிரிழந்தார். இந்நிலையில் ஜசெக மூத்த தலைவரும் கேலாங்பாத்தா தொகுதி மக்களவை உறுப்பினருமான லிம் கிட் சியாங் நேற்று பால முருகன் குடும்பத்தினரை சென்று கண்டார். அப்போது தடுப்புக் காவலில் மரணம் நிகழ்வதை முடிவு கட்டும் வகையிலான தீர்வைக் கண்டறிய உள்துறையமைச்சர் ஜாஹிட்டுடனான சந்திப்பிற்கு வேண்டுகோள் விடுப்பேன் என்றார் லிம். தடுப்புக் காவல் மரணம் மூர்க்கத்தனமானது. ஈராயிரத்தாம் ஆண்டு முதல் 243 பேர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். அவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். நாம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். யாரையும் தடுப்புக் காவலில் மரணமடையும் வகையில் நடத்த இயலாது. இவ்விஷயத்தில் தொடர் நடவடிக்கையை மேற்கொள்வேன். நிச்சயம் நீதி கிடைக்கும் என பாலமுருகனின் குடும்பத்தாருக்கு அவர் உறுதியளித்துள்ளார். தடுப்புக் காவலில் மரணமுற்றோருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க என்ன மாதிரியான நடவடிக்கை தேவை என நாடாளுமன்ற மூத்த உறுப்பினரான லிம் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காருக்கு கேள்வி விடுத்துள்ளார். தடுப்புக் காவல் மரணச் சம்பவங்களை புலனாய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்க 2004இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி பரிந்துரைத்தார். அது தொடர்பில் போலீஸ் இதுநாள் வரை அமைதியாக உள்ளது.தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்பில் மலேசிய மனித உரிமை ஆணையம், சுஹாகாம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img