வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி!
வியாழன் 16 பிப்ரவரி 2017 13:27:39

img

சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித் துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக முதல்வர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று மாலை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இது தர்மத்தின் வெற்றி என்று அவர் கூறினார். அதிமுக ஆட்சி தொடரும் என்றும் தம்பிதுரை கூறினார். தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து பாடுபடும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சித் தொடரும் என்று கூறிய தம்பிதுரை இது சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார். தம்பிதுரையின் இந்த பேச்சு சசிகலாவை வெறுக்கும் அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img