திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்பு?
வியாழன் 16 பிப்ரவரி 2017 13:13:06

img

கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களினால் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவில் நடைபெற்று வரும் குழப்பங்கள்,சசிகலா சிறை தண் டனை உறுதி செய்யப்பட்டதிலிருந்து விறுவிறுப்படைந்துள்ளது. ஆட்சி அமைக்க போவது யார் என்பதில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எனப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரி டையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இருதரப்பும் பல்வேறு முறை ஆளுநரை சந்தித்து,ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எல்எல்ஏக்கள் எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருந்த நிலையில், சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது முறையாக இன்றும் காலை ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் ஆலோசனை கூவத்தூரில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உடனான சந்திப்பு முடிந்த உடன் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் இன்று மாலையே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார் என்று அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
img
`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது.

மேலும்
img
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!

சீனிவாசன் சாலையின் ஓரத்தில் நின்று போன்

மேலும்
img
சோபியாவை போலீசார் மனரீதியாக சித்ரவதை செய்துள்ளனர்: சோபியா வழக்கறிஞர் புகார்

சோபியா மற்றும் அவரது தந்தை சாமி

மேலும்
img
இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

கடந்த 20ந் தேதி தன்னுடைய மகள்கள் படிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img