வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மோதல்!
செவ்வாய் 14 பிப்ரவரி 2017 15:02:51

img

கோலாலம்பூரிலிருந்து காராக் செல்லும் நெடுஞ்சாலையின் 43.9ஆவது கிலோ மீட்டரில் இரு அதிவேக மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.காலை 10.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் டாமன்சாரா பாருவைச் சேர்ந்த முகமட் நோராஸார் மாட் ஜுமாட் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற கேடிஎம் ஆர்சி 250 ரக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததுடன் முன்னால் சென்ற யமாஹா ஒய்ஜெட் எப்-ஆர்1 ரக மோட்டாரை மோதியுள்ளது. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முகமட் சம்சூல் ஜமில் (43) சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் மன்சோர் முகமட் நோர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் டாமன்சாராவிலிருந்து பெந்தோங்கிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெந்தோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img