வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

மரம் விழுந்ததில் இந்திய பெண்மணி மரணம்!
திங்கள் 13 பிப்ரவரி 2017 14:10:44

img

சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்த பொட்டானிக் கார்டன்ஸ் எனப் படும் பூ மலையில் நேற்று முன்தினம் மாலை 4.25 மணிக்கு தெம்புசு எனும் மரம் விழுந்ததில் இந்தியப் பெண்மணி ஒருவர் மரணமடைந்த அதே வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். 38 வயதுடைய இந்திய பிரஜையான அப்பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் மரணமடைந்ததை தேசிய பூங்கா வாரியம் இரவு 8.32 மணிக்கு உறுதிப்படுத்தியது. இந்திய நாட்டு பெண்மணியின் 39 வயது பிரான்ஸ் நாட்டு கணவர் அவர்களின் இரு குழந்தைகள், 26 வயதுடைய சிங்கப்பூர் பெண் மணி ஒருவரும் அச்சம்பவத்தில் காயமடைந்தனர். சுமார் 270 ஆண்டுகளுக்கு மேலான அந்த தெம்புசு மரத்தை ஆகக் கடைசியாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரிசோதித்ததில் ஆரோக்கியமாக இருந்ததாக தேசிய பூங்கா தெரிவித்தது. 6.5 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மரம் விழுந்த இடத்தின் சுற்றளவில் செம்பனை மரங்கள் இருந்தன. கனடா தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போது அந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்த மற்றவர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தற்போது தங்களின் முதல் கடமை என தேசிய பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி கென்னர் எர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img