செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

ஓ.பன்னீர் & தோனி! இன்றைய தேதியில் மிக மிக முக்கியமான செலிப்பிரிட்டிகள்!
ஞாயிறு 12 பிப்ரவரி 2017 15:21:26

img
'தன்மானத் தமிழர்' ஓ.பி.எஸ் - 'தங்கத் தலைவன்' தோனி இருவருமே இன்றைய தேதியில் மிக மிக முக்கியமான செலிப்பிரிட்டிகள். என்னதான் ஏரியா வேற வேற என்றாலும், இவர்கள் இருவருக்கும் இடையில் எக்கச்சக்கமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது ஒரு மத்தியான வேளையில் 'சின்னம்மா சபதம்' படம் பார்த்தபோது உறைத்தது. அந்த அரிய கண்டுபிடிப்புகள் உங்கள் பார்வைக்கு... அதிகம் கிரிக்கெட் பார்க்காத வெளிநாட்டு ரசிகர்கள் தோனிதான் இந்திய அணியின் கேப்டன் எனச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். காரணம், வேர்ல்ட் கப் ஜெயித்த கேப்டன் என்ற பெருமையோ, பந்தாவோ அவருக்கு இருக்கவே இருக்காது. இந்த எளிமை விஷயத்தில் தோனி பரங்கிமலை என்றால், ஓ.பி.எஸ் பழநிமலை. நான்தான் முதல்வர் என்பதை ஓ.பி.எஸ்ஸே நம்ப மாட்டார். பணிவுன்னா பணிவு... அப்படி ஒரு பணிவு! * எவ்வளவு பெரிய கோப்பையானாலும் சரி, ஜெயிக்கும் வரைதான் தோனி நட்ட நடுவில் இருப்பார், கொண்டாட்டங்களிலோ, கோப்பை வாங்கும் தருணத்திலோ தோனி எப்போதும் ஒதுக்குப்புறம்தான். ஓ.பிஎஸ்ஸும் அப்படியே. தமிழ்நாடே அதிர்ந்து குலுங்கும் போராட்டமாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க-வே உடையப்போகும் அபாயமானாலும் சரி... ஓ.பி.எஸ் இருக்கும் இடமே தெரியாது. அமைதியே வடிவாய் ஒதுங்கியிருப்பார். * தோனியின் ஸ்பெஷலே கெட்டப் சேஞ்ச்தான். சடை முடியோடு ஒரு சீஸன், சம்மர் கட்டில் ஒரு சீஸன், சால்ட் அண்ட் பெப்பெரில் ஒரு சீஸன்... என வெரைட்டி காட்டி வெளுத்து வாங்குவார். ஓ.பி.எஸ் அடிக்கடி கெட்டப் மாற்றுவதில்லை என்றாலும், வெரைட்டி நிச்சயம் உண்டு. கொஞ்ச காலம் வெள்ளை வெளேரென தாடி வைத்து சுற்றிக்கொண்டிருந்தார். அப்புறம் ட்ரிம் செய்த தாடியோடு கொஞ்சநாள். இப்போது க்ளீன் ஷேவ். * மொத்த நாடும் கம்மென தூங்கத் தயாராகும்போது திடீரென, 'கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்' என்பார். 'ஓய்வு பெறுகிறேன்' என்பார். இந்தத் திடீர் திடீர் அறிவிப்புகள் தோனி ஸ்பெஷல். ஓ.பி.எஸ்ஸும் இதே மாதிரிதான். ஓ.பி.எஸ்தான் இனி பவர் ப்ளேயர் என எல்லோரும் எதிர்பார்க்கும்போது, 'சின்னம்மா சரணம்' என அறிவிப்பு விடுவார். 'சாஃப்ட்டா டீல் பண்ணுவார்' என எதிர்பார்க்கும்போது போலீஸை விட்டு அடித்து விரட்டுவார். புரியாத புதிர் பாஸ் நீங்க! * என்னதான் கோப்பைகள் பல வென்ற கேப்டனாக இருந்தாலும் இவருக்கு எதிரிகள் அணி நிர்வாகத்திலேயேதான். 'வயசாயிடுச்சு, கோஹ்லிக்கு வழிவிடுங்க', 'ஃபார்ம்ல இல்லை, ரிட்டையர்் ஆகிடுங்க' என குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதேபோல் ஓ.பி.எஸ் என்னதான் சாஃப்ட் சி.எம்-மாக இருந்தாலும், 'செல்லாது செல்லாது... சின்னம்மாவுக்கு வழிவிடுங்க' என சொந்தக் கட்சியிலேயே வேட்டு வைப்பார்கள். * தோனிக்கும் சரி, ஓ.பி.எஸ்ஸுக்கும் சரி... சென்னையின் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் செம ராசி. அது சேப்பாக்கம்! அதுநாள் வரை கேப்டனாக இருந்த தோனி லோக்கல் தல ஆனது சேப்பாக்கத்தின் சூப்பர் கிங்ஸுக்கு கேப்டனான பின்னர்தான். அதேபோல வெறும் அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் முதலமைச்சரானதும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருக்கும்போதுதான். (என்ன, லாஜிக் இடிக்குதா? நீங்க ரொம்ப லேட்டு பாஸு. முதல்ல இருந்தே அது இடிச்சுக்கிட்டுதான் இருக்கு!)
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கடன் பிரச்சனை... பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும்

மேலும்
img
‘கமலைவிட ரஜினி என்ன செய்திருக்கிறார்’- சீமான் கண்டனம்

இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும்

மேலும்
img
கூட்டணி கட்சிகளை கழட்டி விட அதிமுக முடிவு?

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை

மேலும்
img
இளைஞர்களின் தீவிரவாத சிந்தனை பரவல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...

நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல்

மேலும்
img
சட்டப்பேரவை தேர்தல்: பாஜக -வின் அடுத்த அதிரடி திட்டம் ரெடி...

மக்களவை தேர்தலில் பாஜக நடத்திய மிகப்பெரிய

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img