வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

வலுவடைந்தது ஓ.பி.எஸ். அதிமுக.. எம்.பிக்கள் குவிந்தனர்!
ஞாயிறு 12 பிப்ரவரி 2017 14:27:19

img

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரே நாளில் 5 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு ஆதரவான எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு பிடித்து வைத்துக் கொண்டதால் அவர்களில் பலர் பன்னீர் முகாமுக்கு வர முடியாத நிலை. ஆனால் எம்.பிக்கள் சாரை சாரையாக வருகின்றனர். நேற்று வரை 5 எம்.பிக்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்திருந்தது. இன்று மேலும் 5 எம்.பிக்கள் வந்து விட்டனர். இன்று காலை தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் செங்குட்டுவன் மற்றும் பெரம்பலூர் மருதராஜா ஆகிய 3 எம்.பிக்கள் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து 2 எம்.பிக்கள் வந்து சேர்ந்தனர். ராஜ்யசபா உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் லோக்சபா தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஓ.பி.எஸ். அணிக்குத் தாவினர். ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டமே ஓ.பி.எஸ் பக்கம் வந்ததால் ஓ.பி.எஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது. ஏற்கனவே மைத்ரேயன், நாமக்கல் பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக்குமார், திருப்பூர் சத்யபாமா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பாவும், முதல்வருக்கே ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். அதிமுகவிடம் மொத்தம் 50 எம்.பிக்கள் (லோக்சபா, ராஜ்யசபாவில்) உள்ளனர். அதில் 10 பேர் தற்போது ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளது சசிகலாவை அதிர வைத்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img