சனி 16, பிப்ரவரி 2019  
img
img

பேரா மஇகா ஒரு முதியோர் இல்லமா?
சனி 11 பிப்ரவரி 2017 14:16:14

img

மலேசிய இந்தியர்களின் பாரம்பரிய அரசியல் கட்சியான மஇகாவின் நிலைமை படுமோசமாக இருப்பதற்கு உதாரணமாக பேரா மாநில மஇகா செயல்பட்டு வருவதைக் காண்பதற்கு வேதனையே மிஞ்சுவதாக பேரா மாநில இந்தியர்களில் பலர் மலேசிய நண்பனைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மஇகாவின் செயல்பாடுகள் பேரா இந்தியர்களுக்குத் துளியளவு கூட முன்னுரிமை வழங்காமல் தலைவர்களின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்து வருவது உடனடியாக மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என மஇகா வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்பிரமணியத்தை நண்பன் குழுவிற்கு அழைத்தவர்கள் தெரிவித் துள்ளனர். முடமாகக் கிடக்கும் பேரா மஇகா பேரா மாநிலத்தில் 24 தொகுதிகள் உள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான சேவை மையங்களை கூட ஏற்படுத்தாமல் தேர்தல் காலங்களில் வழங்கப்படவிருக்கும் மானியங்களை முழுமையாக கையகப்படுத்துவதற்காக திடீர் சேவை மையங்களை அமைக்கும் சாணக்கி யத்தினை மஇகாவினைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பதற்கு சான்றுகளே தேவையில்லை. மேலும் பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் 24 தொகுதிகளில் பாதிக்கும் மேலான தொகுதிகளை மறு சுழற்சித் தலைவர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் 70 வயதிற்கும் கூடுதலான வர்களாக இருந்து வருவது மஇகாவிற்கு மிகப்பெரிய பலவீனமாகவே கருத வேண்டியுள்ளதாக தஞ்சோங் மாலிம் தொகுதியிலிருந்து அழைத்திருந்த மஇகாவின் தலைவர் ஒருவர் கருத்துரைத்திருந்தார். பேரா மாநில மஇகாவின் தொகுதித் தலைவர்களில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சபா நாயகர், செனட்டர் மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இயக்குநர் பதிவிகளில் ஒன்றிற்கும் மேல் அனுபவித்து விட்டு இன்னமும் இருக்கும் வாய்ப்புகளையும் முழுமையாக அபகரித்துக் கொள்ளும் சூழலை எதையுமே கண்டு கொள்ளாமல் பேரா மாநில மஇகாவின் தலைவராகச் செயல்பட்டு வரும் டத்தோ இளங்கோவின் நட வடிக்கைகளில் பேரா மாநில இந்தியர்கள் அதீதமான அதிருப்தியைக் கொண்டிருப்பதாக நண்பன் குழு மேற் கொண்ட ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. லாருட் (தேவராஜ்), ஈப்போ பாராட் (டத்தோ ராஜா), ஈப்போ தீமோர் (டத்தோ கணேசன்), தம்பூன் (டத்தோ ஷாகூல் ஹமீட்), கம்பார் (டான்ஸ்ரீ வீரசிங்கம்), கோலக்கங்சார் (பூபாலன்), தஞ்சோங் மாலிம் (டத்தோ கே.ஆ.ஏ.நாயுடு), தெலுக் இந்தான் (டத்தோ இராமச்சந்திரன்), புருவாஸ் (சிவசாமி) ஆகியோர் 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் நிலையில் எல்லா பதவிகளில் சுகம் கண்டவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் தொகுதி நிலையில் மஇகாவின் மேம்பாடுகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் துளியளவும் சேவையாற்றாத நிலையினை மறுக்க முடியுமா என நண்பன் குழு கேட்கின்றது. இதற்கிடையே பேரா மாநிலத்தில் முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் வழி மிகப்பெரிய அளவிலான நில விண்ணப்பத்தை செய்திருப்பதாக வந்திருக்கும் தகவலில் உண்மை உள்ளதா என்பதை மாநிலத் தலைவர் பேரா இந்தியர்களுக்கு விளக்குவாரா என்ற கேள்விக்கும் விடை தேவைப்படுவதாக நண்பன் குழு கருதுகின்றது செயல் நடவடிக்கை அறிக்கை கிடைக்குமா? பேரா மாநில ம.இ.கா.வின் தலைமைத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் அவலமான நிலையால் பேரா மாநில இந்தியர் களின் நலன்கள் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கும் உண்மையை மறுக்க வேண்டுமானால் பேரா ம.இ.கா. வின் தலைவர் டத்தோ இளங்கோ கடந்த மூன்று ஆண்டுகளாக தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட இந்தியர் நலன்களுக்கான திட்டங்களின் செயலறிக்கையை பகிரங்கப்படுத்த முடியுமா? என நண்பன் குழு சவால் விடுக்கின்றது. கடந்த 70 ஆண்டுகளாக கட்சி நிலையில், தொகுதி நிலையில், மாநில நிலையில், தேசிய நிலையில் செய லாற்றுபவர்களின் செயலறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவே வரலாறு இல்லை என்பதை யாராவது மறுக்க முடியுமா? பேரா மாநில நிலையில் தற்போதைய ம.இ.கா.வின் தலைமைத்துவம் இந்தியர்களிடம் வாக்குகளைச் சேகரிக்க முடியுமா என்ற கேள்விக்காவது பதில் கூற வேண்டிய நிர்பந்தம் இருப்பதாக நண்பன் குழு கருதுகின்றது. நாளை கேட்டால் தருவோம் வந்தால் கொடுப்போம்!

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img