வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

சீனாவுக்கு பணிந்தார் டொனால்டு டிரம்ப் !
வெள்ளி 10 பிப்ரவரி 2017 13:21:44

img

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக சீனாவின் ஜனாதிபதி Xi Jinping உடன் போனில் பேசிய டிரம்ப் சீனாவின் One China கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல நாட்டு தலைவர்களை சந்தித்தும், தொலைபேசியில் உரையாடியும் வந்தார். ஆனால் சீனாவின் ஜனாதிபதியிடம் மட்டும் அவர் இதுவரை பேசாமல் இருந்தார். தற்போது இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். மேலும், டிரம்ப் எதிர்ப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சீனாவை மட்டும் ஆதரித்து, தைவானை ஆதாரிக்க கூடாது எனப்படும் One China கொள்கைக்கு அவர் ஆதரவு அளித்துள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தலைவர்களும் வெகு நேரம் தொலைபேசியில் பேசினார்கள்.அதில், பல தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சீன ஜனாதிபதியின் One China விடயமான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட டிரம்ப் அதற்கு ஆதரவுளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு Xi Jinping நன்றி தெரிவித்து கொண்டார் எனவும், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொள்ள பரஸ்பர அழைப்புகளை மேற்கொண்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
img
பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img