செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

அதிமுகவிலிருந்து இன்று நீக்கப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம்!
புதன் 08 பிப்ரவரி 2017 12:08:17

img

அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தீர்மானம் போடப்படும் என்றும், அவரை கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தி தீர்மானம் போடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஓ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கப்பட்டால் அதிமுக முறைப்படி உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக பல முக்கிய நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டால் மேலும் பலர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர் என்பது முக்கியமானது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன

மேலும்
img
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை

மேலும்
img
`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர்

மேலும்
img
ரஃபேல் விவகாரம் ...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்

ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை

மேலும்
img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img