ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

பேரா மாநில இந்தியர்களுக்கான மானியத்தின் செயல்பாடுகள் என்ன?
திங்கள் 06 பிப்ரவரி 2017 15:37:53

img

பேரா மாநிலம் தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் வந்ததைத் தொடர்ந்து மந்திரி புசாராகத் தலைமையேற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர், பேரா மாநில இந்தியர்களின் நலன் களுக்காக முதல் முறையாக இரண்டு வகையான மானியங்களை அறிவித்தார். இது மாநில வரவு செலவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. இதனை மலேசிய நண்பன் குழு வரவேற்கும் அதே சமயம், மாநில இந்தியர்களின் பிள்ளைகள் இதன் வழி நன்மை அடைந்துள்ளனரா என்ற கேள்வி பேரா மாநில இந்தியர்களிடையே எதிரொலித்திருப்பதை நண்பன் குழுவிற்கு கிடைத்துள்ள தொலைபேசி அழைப்புகளின் வழி உணர முடிகின்றது. பேரா மாநில இந்தியர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி கீழ்க்கண்ட திட்டங்களை அறிவித்திருந்தார்: * வெ.10 லட்சம் (வெ.1 மில்லியன்) மதிப்பிலான நிதியை பேரா இந்தியர்களுக்கான சிறப்பு கல்வி நிதியாக ஒதுக்கீடு செய்திருந்தார்; * அதே வேளையில் பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதியாக வெ.500,000- ஐயும் ஒதுக்கீடு செய்திருந்த தகவலை பேரா மாநில ஆண்டு வரவு செலவு திட்டத்தின் வழி அறிய முடிகின்றது. மலேசிய நண்பன் குழுவினை தொடர்பு கொண்டவர்கள் மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முழுமையான விவரங்கள் பேரா மாநில இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். அவர்கள் எழுப்பிய சில கேள்விகளை இங்கே முன் வைக்கின்றோம். * வெ. 1 மில்லியன் மானியத்தின் வழி பயன்பெற்றிருக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? * வெ. 1 மில்லியன் வழி எவ்வகையில் பயன்பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்? * ஆண்டுதோறும் மாநில அரசாங்கம் நடத்திவரும் யூபிஎஸ்ஆர் சாதனை விழாவிற்கான மானியம் இந்த நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளதா? * பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிலையம் ஒன்றிற்கு மானிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? * பேரா மாநில இடைநிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்ட ‘சக்தி பகுதி’ எனும் திட்டத்திற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பேரா மாநில மஇகாவின் தொடர்புக் குழுத் தலைவராகச் செயல்படுபவர் முழுமையான விவரங்களைத் தர வேண்டும் என பேரா மாநில இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர். பேரா மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் இந்தியர்களின் நலன் கருதி பத்திரிகைச் சந்திப்புகளையே நடத்தியதில்லை எனவும் தெரிவித்தனர். பேரா மாநில இந்தியர்களின் எதிர்பார்ப்பை மஇகாவின் தொடர்புக்குழுத் தலைவர் நிறைவு செய்வாரா?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img