திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவலா?
திங்கள் 06 பிப்ரவரி 2017 13:23:32

img

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட நபர் தீவிரவாதியா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.இரு தினங்களுக்கு இங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்த காவலரை கத்தியால் குத்தினான். பின்னர் அவன் அல்லாஹு அக்பர் என கத்தியுள்ளான். இதை பார்த்த அருகிலிருந்த பாதுகாப்பு படையினர் அவனை துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் இருக்கும் அவன் உடல் நிலை தற்போது தேறி வருகிறது. இந்நிலையில் அவன் பெயர் Abdallah El Hamahmy (29) என்றும் அவன் எகிப்திய நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், Abdallah ஐ.எஸ் தீவிரவாதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காரணம், இந்த செயலை அவன் செய்யும் முன்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், அல்லாவின் பெயரால், சிரியா மற்றும் உலகில் உள்ள சகோதரர்களுக்காக என டுவிட் செய்துள்ளான். அடுத்த டீவீட்டில் ISIS என எழுத அவன் டிவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.இதனிடையில் தன் மகன் தீவிரவாதி இல்லை என Abdallahவின் தந்தை Reda El-Hamahmy தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் மகன் தொழில் விடயமாக பாரீஸ் வந்தான், அவன் துப்பாக்கி வைத்திருந்தான் என சொன்னால் வேண்டுமானால் அவன் தீவிரவாதி என நம்பலாம், ஆனால் அவனிடம் அது இல்லை. அவன் சாதரண குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் என கூறியுள்ளார்.பிரான்ஸ் பொலிசார் இந்த சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டால் தான் Abdallah பற்றிய சரியான விபரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img