செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு!
திங்கள் 06 பிப்ரவரி 2017 13:06:44

img

முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒருவாரத்தில் வழங்க இருக்கிறது உச்சநீதிமன்றம். 1991-96-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். ஆனால் ஜெயலலிதா, சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்பை நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது. இதனிடையே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கபளீகரம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் சசிகலா. அத்துடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவே சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலா தயாராகிவருகிறார். ஓரிருநாட்களில் அவர் முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தகவல் சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img