சனி 22, செப்டம்பர் 2018  
img
img

என்னுடைய உத்தரவுக்கு தடையா?
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:06:04

img

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்று 14 நாட்கள் கடந்துள்ள நிலையில், டிரம்ப் மீதான விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணமாக கருதுவது ரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார். மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு சில நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. இந்நிலையில், 7 நாட்டு இஸ்லாமியர்கள் நுழைய அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் சியாட்டல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் ரோபர்ட் நேற்று டிரம்ப் உத்தரவிற்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img