செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

80 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலிதேவரால் உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு நிலப்பட்டா!
சனி 04 பிப்ரவரி 2017 15:11:17

img

80 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை பயிரிட்டு வந்த காலஞ்சென்ற சங்கிலி தேவரால் உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு நிலப்பட்டா வழங்கப்பட்ட வேளையில் அவரின் பேரன், பேத்திகள் அதனை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நேற்று இங்குள்ள மாவட்ட மன்ற அலுவலகத்தில் கம்போங் சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த 20 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது. நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த இக்கிராமத்தின் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தொகுதி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் திருப்பதி இங்கு கூறினார். இக்கிராமத்தில் மொத்தம் 67 குடும்பங்கள் வசித்து வருவதாக மாவட்ட மன்ற கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஜம்ரி முக்கிய பங்காற்றினார். முதல் கட்டமாக 40 பேருக்கு நிலப்பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் விண்ணப்பங்கள் முழுமை பெறாத நிலையில் மற்றொரு நிகழ்வில் இதனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் உறுதிபடுத்தப்பட்டவர்கள் நிலத்திற்கான பிரிமியம் தொகை, வாரிசு விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேற்று நிலப்பட்டாக்களை பெற்றுக் கொண்டவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எங்கள் தாத்தா காலஞ்சென்ற சங்கிலி தேவர் இங்கு வெற்றிலை பயிரிட்டு வந்த போதுதான் இக்கிராமம் உருவானது என்று பேத்தியான சுஹாஷினி கூறினார். எங்கள் பெற்றோர்கள் இப்பகுதியில் தங்கியிருந்த காலத்தில் நாங்கள் இங்கு ஓடியாடி விளையாடியதை நினைவுபடுத்தினார். தாத்தாவுக்கு பிறகு பெற்றோர்கள் இந்நிலத்திற்கு போராடினார்கள். இப்பொழுது எங்களுக்கு இந்நிலத்திற்கான பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எம்.ரத்னமாலா கூறினார். இங்கு நாங்கள் குடியிருப்பதற்கு வீடு உள்ள நிலையில் நிலப்பட்டா கிடைத்திருப்பதன் மூலம் வீட்டை புதுப்பித்து கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினார். இக்கிராமத்தில் நீண்ட காலமாக வசித்து வரும் ஆனந்தன் தமக்கு நிலப்பட்டா கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எவ்வளவோ போராட்டங்களை கடந்து இன்று நிலப்பட்டா கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார்.மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான எம்.ஜோதிலட்சுமி நிலத்திற்கான பட்டா கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தரும் அதே வேளையில் நிலப்பட்டா கிடைப்பதற்கு துணை புரிந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கோப்பெங் வட்டாரத்தில் கம்போங் சங்கிலி கிராம மக்களுக்கு நிலப்பட்டாவும் இங்குள்ள ஆலயத்திற்கு நிலமும் மாநில அரசு வழங்கியுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img