திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

ஜெ. மரணம் குறித்த என் கேள்விக்கு பிரதமர் பதில் சொல்லாதது ஏன்?
சனி 04 பிப்ரவரி 2017 14:34:11

img

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த தனது கேள்விக்கு இதுவரை பிரதமர் மோடி பதிலளிக்காமல் இருப்பது, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை கவுதமி கூறியுள்ளார்.உடல் நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்துமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார் நடிகை கவுதமி. ஆனால் அந்தக் கடிதத்துக்கு பிரதமர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இல்லை. இந்த நிலையில் தனது கடிதத்துக்கு இத்தனை நாட்களாகியும் பிரதமர் அலுவலகம் பதில் தராதது ஏன் என்று கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் நிலவுவதைக் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைத் தளங்களிலும் மீடியாவிலும் பலராலும் பகிரப்பட்டது. சமூக வலைத் தளங்கள், மீடியாவைப் பாவிப்பதில் பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட முன்னோடியாகத் திகழ்பவர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் நேரடியாகவும் மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை. இந்த நாட்டின் பிரஜை என்ற முறையில் ஜனநாயக முறைப்படி நான் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் சந்தேகத்தை பிரதமருக்குத் தெரிவித்திருந்தேன். பல லட்சம் மக்களுக்குத் தெரிந்த அந்தக் கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது, குடிமக்களாகிய நம்மைச் சூறையாடுவதற்குச் சமம். பிரதமர் மோடியை நான் பெரிதும் மதித்தேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனத்து கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார்? தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர். ஆனால் ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை. தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் மறுப்பதும், ஜெயலலிதாவுக்கு நீதி மறுப்பதும் தமிழக மக்களுக்கு மறுக்கப்படும் நீதியாகும். ஜெயலலிதா மறைவு, வரதா புயல் போன்றவற்றால் தமிழக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அரசு தங்கள் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை என்ற வேதனையில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய துயரங்களுக்குப் பிறகாவது மத்திய அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி ஏதாவது வரும் என்று எதிர்ப்பார்த்தோம். ஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை... ஆனால் பதிலே கிடைக்கவில்லை என்றால், அந்த குடிமகனுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்றுதானே அர்த்தம்...? அதுவும் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா? இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ?" என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img