வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

சீனா மீது அடுத்த 10ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும்
சனி 04 பிப்ரவரி 2017 13:56:38

img

சீனா மீது அடுத்த 10ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைக்குழு ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ள சீன தெற்காசிய கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் சீனக் கடற்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி வரும் சீன அதிநவீன போர் ஆயுதங்களை வரிசைப்படுத்தி வருகிறது. இது அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் ஸ்டீவ் பெனான் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தென் சீனக்கடல் பிரச்சனை குறித்து தொப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பெனான் ''அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள் உள்ளன. ஒன்று சீனா மற்றொன்று இஸ்லாம்'' என்றார். "சீனா மீது 10 ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சீனா பண்டைய பிராந்திய கடற்பகுதியில் மணற்கட்டிகளை கொண்டு செயற்கை தீவுகளை உருவாக்கி வருகிறது. விமானம் தாங்கிய கப்பல்களையும் நிறுத்தி வருகிறது. ஒரு நாள் அமெரிக்காவின் முகத்திற்கு முன் அவர்கள் வருவார்கள். அப்போது நம் முகம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்வோம். அது பண்டைய பிராந்திய கடற்பகுதிதான். அமெரிக்காவைக் காட்டிலும் சீனா அதிகமாக அச்சப்படுகிறது. அவர்கள் கிறிஸ்தவர்களை கண்டு அஞ்சுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் மீது மீண்டும் ஒரு பெரிய போர்த்தொடுக்கப்படும் என நினைக்கிறேன்." இவ்வாறு ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பெனான் பேசியுள்ளார். அமெரிக்க அதிபாராக பதவியேற்று ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குண்டைப் போட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ட்ரம்ப்பின் ஆலோசகர் சீனா மீதும் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img