புதன் 21, நவம்பர் 2018  
img
img

மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப முடியும் அன்வாருக்கு நீதிமன்றம் அனுமதி
வியாழன் 19 ஜனவரி 2017 09:06:51

img

புத்ராஜெயா, ஜன. 19- கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மன்னிப்பு வாரியம் முடிவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் இரு சட்ட அம்சங்கள் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எழுப்பிய கேள்விகள் சம்பந்தமாக வழக்கு தொடர்வதற்கு நேற்று இங்குள்ள மேல்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் செவிமடுக்கும் என்றும் வழக்கின் தேதி நிர்ணயிப்பது தொடர்பில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.நீதிபதிகள் டத்தோஸ்ரீ ஜக்கரியா சாம், டத்தோ மேரி லிம் ஆகியோருடன் நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற மேல்முறையீட்டு நீதிபதி டத்தோ மேரி லிம், ஒருமித்த குரலோடு முடிவை அறிவித்தார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அன்வார் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ஒரு கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கியிருந்தேன். இறைவன் அருளில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பை வரவேற்கிறேன் என்று அன்வார் குறிப்பிட்டார். ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து சிறைத்தண்டனையை எதிர்த்து அன்வார் செய்து இருந்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்து இருந்தது. எனினும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெறும் தம்முடைய முயற்சி நிற்காது என்றும் தொடரும் என்றும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராஹிம் அப்போது தெரிவித்து இருந்தார். எல்லாம் முடிந்து விடவில்லை. சட்டப்படி அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து என் வழக்குரைஞர்களுடன் விவாதிப்பேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் மன்னிப்பு வாரியத்திடம் அன்வார் செய்து கொண்டிருந்த தண்டனையை ரத்து செய்யும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் அதன் முடிவின் தன்மை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அது குறித்து நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அவ்விவகாரத்தை விசாரணை செய்தது. பொதுவாகவே நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்து ஒரு வழக்கில் தண்டனையை ரத்து செய்வதற்கு மன்னிப்பு வாரியத்திடம் விண்ணப்பம் செய்வதற்கு ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, மன்னிப்பு வாரியம் அந்த மனுவை நிராகரிக்குமானால் அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. சர்ச்சை செய்ய முடியாது என்பதுதான் இவ்வளவு காலமாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் முடிவு குறித்து கேள்வி எழுப்பி வழக்கை தொடர்வதற்கு அனுமதி பெறப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 1994 ஆம் ஆண்டு கூட்டரசு அரசமைப்பு சட்டம் 40(1ஏ) பிரிவின் திருத்தம் மற்றும் பிரிட்டனில் நடைபெற்ற ஒரு வழக்கின் தன்மை குறித்து அன்வார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரு கேள்விகளை எழுப்பியிருந்தார். அன்வாரின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப முடியும் என்பதை கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருப்பதானது இவ்வழக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குறிப்பாக தூக்கு கைதிகளின் உரிமை குறித்து மிகப்பெரிய தாக்கத்தை இந்த வழக்கு ஏற்படுத்தும் என்றார். சுருங்கச்சொன்னால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்து இருக்கும் இந்த முடிவினால் கைதிகளின் உரிமை குறித்து மன்னிப்பு வாரியத்திடம் விவாதிக்க முடியும் என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img