திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

ஸ்ரீ செனவாங் கிளப்பின் கால்பந்துப் போட்டி ஜபினா குழு சாம்பியன்!
புதன் 18 ஜனவரி 2017 11:13:57

img

ஸ்ரீ செனவாங் கிளப்பின் கால்பந்துப் போட்டி ஜபினா குழு சாம்பியன்! (துர்க்கா) சிரம்பான், ஜன. 18- ஸ்ரீ செனவாங் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டிலான லீக் கால்பந்துப் போட்டியில் ஜபினா குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். சிரம்பான், நகராண்மைக் கழகத் திடலில் 3ஆவது ஆண்டாக நடைபெற்ற இக்கால்பந்துப் போட்டியில் 40 குழுக்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின. லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிள்ளானைச் சேர்ந்த ஜபினா அணியினர் இறுதியாட்டத்தில் தெர் எப்சி அணியை சந்தித்து விளையாடினர். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜபினா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் தெர் எப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஜபினா அணியினருக்கு ஸ்ரீ செனவாங் கால்பந்து கிளப்பின் வெற்றி கிண்ணமும், 2 ஆயிரம் வெள்ளியும் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த தெர் எப்சி அணியினருக்கு 1000 வெள்ளி பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த செண்டையான் எப்சிக்கு 700 வெள்ளியும், நான்காவது இடத்தை பிடித்த ரந்தாவ் அணிக்கு 500 வெள்ளியும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. காலை தொடங்கி மாலை வரை பரபரப்பாக நடைபெற்ற லீக் கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு ஸ்ரீ செனவாங் எப்சி நிர்வாக குழு பொறுப்பாளர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15

மேலும்
img
வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

மேலும்
img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
img
சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.

தேசிய வீரர் முகமட் பௌசி காலிட்

மேலும்
img
மலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.

நீச்சல் போட்டியில் மலேசியாவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img