img
img

ஜொகூரின் போரஸ்ட் சிட்டி விவகாரம் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது டாக்டர் மகாதீர் திட்�
புதன் 18 ஜனவரி 2017 10:45:41

img

கோலாலம்பூர், ஜன. 18- ஜொகூரின் போரஸ்ட் சிட்டி மீதான தனது நிலைப்பாடு ஜொகூர் ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இஸ்காண்டாருக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த நிலைப்பாட்டினை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். போரஸ்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்ந்து குறை கூறி வரும் டாக்டர் மகாதீர், இந்தத் திட்டத்தால் பணம் நாட்டை விட்டு வெளியேறும் என்றும் இங்கு குடியேறும் ஆயிரக்கணக்கான அந்நிய தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறி வருகிறார். ஜொகூர்பாரு மேம்பாடு தொடர்பாக ஜொகூர் சுல்தான் எனக்கு சவால் விட்டிருப்பதாக கூறப்படுவது உண்மையா என எனக்கு தெரியவில்லை. சுல்தான் தெரிவித்த கருத்தை தி ஸ்டார் நாளிதழ் இவ்வாறு அர்த்தம் பட பிரசுரித்திருக்கலாம். எனக்கு சவால் விடுவதாக வெளியான செய்தியை சுல்தான் மறுக்காத வரையில், தி ஸ்டாரின் செய்தியை உண்மைதான் என நான் எடுத்துக் கொள்வேன். நான் ஓர் பாதகமான நிலையில் இருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். என்னைப் பற்றி பொதுமக்கள் விரும்பியவாறு பேசட்டும். அவர்களது பேச்சுரிமையை நான் வரவேற்கிறேன். சுல்தானின் சவாலுக்கு பதிலளிப்பதால், நான் கைது செய்யப்பட்டு விசாரணை யின்றி சிறையில் அடைக்கப்பட மாட்டேன் என நான் நம்புகிறேன் என்று டாக்டர் மகாதீர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். அவரது அறிக்கை தி ஸ்டார் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும். முதலீடுகள், தொழிலாளர் எண்ணிக்கை, அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் நிதி வழங்கும் வங்கிகள் போன்றவை தொடர்பான அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்று டாக்டர் மகாதீர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். இதை நேர்மையான முறையில் செய்ய வேண்டும். எதுவும் மறைக்கப்படக் கூடாது. வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை பார்வையிட டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனலை அனுமதியுங்கள். அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க அவற்றை மக்களின் பார்வைக்கு வையுங்கள் என்றார் அவர். நானே எதையும் செய்யவில்லை. புளும்பேர்க் பிரசுரித்த தகவலைதான் நான் ஒப்பித்தேன் என்றும் மகாதீர் கூறினார். ஆனால், புளும்பேர்க் தகவல் மறுக்கப்படாததும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? என்றார் அவர். புளும்பேர்க் கடந்தாண்டு நவம்பர் 22ஆம் தேதி பிரசுரித்தது என்ன? சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஜொகூர்பாருவில் போரஸ்ட் சிட்டியை உருவாக்க விருக்கிறது. ஏழு லட்சம் பேர் அங்கு தங்கலாம். அந்தத் திட்டம் தொடர்பான சிறிய அளவிலான மாதிரி கட்டட அமைப்புகளைப் பார்வையிட சீன குடிமக்கள் ஏராளமானோர் வருகிறார்கள். போரஸ்ட் சிட்டியின் பெரும்பாலான சொத்துகளை அவர்கள் வாங்குவர் என்று புளும்பேர்க் தகவல் வெளியிட்டிருந்ததாக மகாதீர் விவரித்தார். ஜொகூர் மலாய்க்காரர்களும் சீனர்களும் இங்கு நிர்மாணிக்கப்படும் அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குவார்களா என்பதில் எனக்கு சந்தேகமே. போரஸ்ட் சிட்டி போன்ற மேலும் 60 திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும், இந்தத் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துகளை சீன குடிமக்களே வாங்கவிருப்பதாகவும் புளும்பேர் தெரிவித்ததாக டாக்டர் மகாதீர் கூறினார். ஜே பி போரஸ்ட் சிட்டியிலும் இதர 60 திட்டங்களிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நியர்கள் வசிப்பர் என அவர் குறிப்பிட்டார். இந்த புதிய இடங்கள் ஒரு வெளிநாடாக மாறி விடாது. ஆனால், அந்த பகுதிகளில் மிகுதியான வெளிநாட்டினர் தங்கி இருப்பர். அவர்கள் நீண்ட காலம் இங்கேயே தங்கிவிட்டால் அவர்கள் மலேசிய குடிமக்களாக மாறும் தகுதியை பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார். அந்நிய நேரடி முதலீடுகளை தான் ஊக்குவிக்காதஆதையும் அவர் ஒப்புக் கொண்டார். கிழக்கை நோக்கும் கொள்கை என்பது கிழக்கு பகுதி நாடுகள் மலேசியாவில் நிலத்தை வாங்கி அதை மேம்படுத்தி வெளிநாட்டினருக்கு விற்பது என்பதல்ல என்று மகாதீர் விவரித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img