வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

ஓபிஎஸ் மீது கடும் காட்டத்தில் போயஸ் கார்டன்.......
வியாழன் 12 ஜனவரி 2017 15:13:53

img

சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய பின்னரும்கூட தம்மை எதுவும் கலந்து ஆலோசிக்காமல் சுதந்திரமாக செயல்படுகிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலர் நாற்காலியில் அமர்ந்த சசிகலா, முதல்வர் பதவிக்கு அடிபோட்டார். ஆனால் மத்திய அரசு சசிகலா வசம் தமிழக அரசு நிர்வாகம் போவதை விரும்பவில்லை. இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு வரவழைத்து 'சுதந்திரமாக' செயல்படுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதையடுத்து சசிகலாவின் போயஸ் கார்டன் பக்கம் ஒரு வாரம் போகாமலேயே இருந்தார் ஓபிஎஸ். பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவழைத்து அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தையும் மன்னார்குடி கோஷ்டி வாங்கி வைத்துக் கொண்டது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு போட்டியாக சசிகலாவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஒருகட்டத்தில் தம்முடைய அறிக்கைதான் முதலில் போக வேண்டும் என்றெல்லாம் கூட சசிகலா உத்தரவு பிறப்பித்தும் பார்த்தாராம். ஆனால் அதைபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓபிஎஸ் தாம் ஒரு முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார். கிருஷ்ணா நதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கப் போகும் விஷயத்தை கூட சசிகலாவுக்கு தெரிவிக்கவில்லையாம் முதல்வர் ஓபிஎஸ். கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு வந்த பின்னரும் கூட இப்படி ஓபிஎஸ் தம்மை கண்டு கொள்ளாமல் இருப்பதால் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லையாம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img