வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

பழனிவேலை கவிழ்ப்பதற்கு கூட்டுச்சதியா? அப்பீல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதன் 11 ஜனவரி 2017 09:02:57

img

* மஇகாவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன * இவ்வழக்கில் பல்வேறு விவகாரங்களுக்கு விடை காணப்படவில்லை- சாட்சிகள் அழைக்கப்படவில்லை * இதுவொரு சாதாரண வழக்கு அல்ல. இதில் ஒன்றுமில்லை என்று கூறி தள்ளுபடி செய்வதற்கு * சாட்சிய சட்டத்தின் கீழ் வாதியின் கோரிக்கைக்கு உரிய கவனத்தை செலுத்த நீதிபதி தவறிவிட்டார் * ஒரு புதிய நீதிபதியை கொண்டு, சாட்சிகளிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் * பழனி ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு சுப்ரா மற்றும் எழுவர் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் புத்ராஜெயா, ஜன.11- மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கவிழ்ப்பதற்கு ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவுடன் இணைந்து கூட்டுச் சதி நடந்து இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் மற்றும் இதர எழுவருக்கு எதிராக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று மேல்முறையீடு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கூட்டுச்சதி நடத்தி இருப்பதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேல்முறையீடு நீதிமன்றம் ரத்து செய்தது. மாறாக இந்த பழனி ஆதரவாளர்களால் தொடுக்கப்பட்ட வழக்கை புதிய நீதிபதி ஒருவரைக் கொண்டு மறுபடியும் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அது உத்தரவு பிறப்பித்தது. இதன் வழி பழனி ஆதரவாளர்கள் செய்து கொண்ட மேல்முறையீட்டில் நேற்று வெற்றி பெற்றுள்ளனர். பழனி ஆதரவாளர்களின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, உயர்நீதிமன்றத்தின் முந்திய தீர்ப்பை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. கடந்த ஓராண்டு காலமாக பெரும் இழுபறி நிலையில் இருந்த இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவின் மூலம் மஇகா வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. இது பழனி ஆதரவாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் வாதிகளான பழனி ஆதரவாளர்களின் மேல்முறையீட்டை விசாரணை செய்த அப்பீல் நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ தெங்கு மைமுன் பின்தி துவான் மாட், டத்தோ நளினி பத்மநாபன், டத்தோ ஸபரியா பிந்தி முகமட் யூசோப், இவ்வழக்கில் டத்தோஸ்ரீ பழனிவேல் ஆதரவாளர்கள், மஇகாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கொண்டு வந்து இருப்பதாக குறிப்பிட்டனர். இவ்வழக்கில் பல விவகாரங்களுக்கு விடைகாணப்படவில்லை, தீர்க்கப்படவில்லை, சாட்சிகள் அழைக்கப்படவில்லை என்று நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற டத்தோ தெங்கு மைமுன் சுட்டிக்காட்டினார். இதுவொரு சாதாரண வழக்கு அல்ல. இதில் ஒன்றுமில்லை என்று கூறி தள்ளுபடி செய்வதற்கு. இதனை தள்ளுபடி செய்து இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றார் அவர். பழனியின் ஆதரவாளர்களின் பிரதான வாதமானது, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கவிழ்ப்பதற்கு சங்கங்களின் பதிவு இலாகாவுடன் இணைந்து டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணிம் மற்றும் இதர ஏழு பேர் கூட்டுச் சதி செய்து இருப்பதாக ஒரு கடுமையான குற்றச்சாட்டை அவர்கள் தங்கள் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதில் உண்மையிலே கூட்டுச்சதி நடந்துள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கு சாட்சிகளை அழைத்து விசாரணை செய்யும் பொருட்டு சாட்சிகள் சட்டம் 44 ஆவது விதியை அவர்கள் தங்கள் வழக்கு மனுவில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, வாதி கோரியுள்ள விதியை கண்டறிவதிலும் அதில் உள்ள உண்மை நிலைப்பாட்டை ஆராய்வதிலும் தவறியுள்ளார் என்று தாங்கள் கருதுவதாக நீதிபதி மைமுனா தெளிவுபடுத்தினார். குறிப்பாக சாட்சிய சட்டத்தின் கீழ் வாதியின் கோரிக்கைக்கு உரிய கவனத்தை நீதிபதி செலுத்தவில்லை. தங்களின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வாதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளர். எனவேதான் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தலையிட வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார். ஆகவே இவ்வழக்கை ஒரு புதிய நீதிபதியின் கீழ் மறுபடியும் முழு விசாரணை செய்யப்பட வேண்டும். வாதிகள் கொண்டு வந்த அனைத்து குற்றச்சாட்டுகளும், சாட்சிகளும் புதிய நீதிபதியின் முன்னிலையில் முழு அளவில் விசாரணை செய்யப்பட வேண்டும். அந்த விசாரணையில் வாதி முன்வைத்துள்ள கோரிக்கை ஒவ்வொன்றுக்கும் விடை காணப்பட வேண்டும். தீர்க்கப்பட வேண்டும். சாட்சிகள் அழைக்கப்பட வேண்டும். விசாரிக்கப்பட வேண்டும். அதேவேளையில் வழக்கில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் இதர எழுவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என்று டத்தோ தெங்கு மைமுன் பின்தி துவான் மாட் அதிரடி உத்தரவிட்டார். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் இதர எழுவர் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறி, மஇகாவின் வியூக இயக்குநர் கே.ராமலிங்கம் உட்பட எழுவர் கடந்த 2016 பிப்ரவரி 5 ஆம் தேதி வழக்குத் தொடுத்திருந்தனர். கே. ராமலிங்கத்தோடு வி.கணேஷ், டத்தோ ஹென்றி பெனடிக், எம். சத்தியமூர்த்தி, ஜார்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம், டத்தோ வி.எம்.ராஜூ ஆகியோர் இந்த வழக்கை சார்வு செய்து இருந்தனர். மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா தேசிய உதவித் தலைவர்களான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், மஇகா தலைமைச் செயலாளர் ஏ. சக்திவேல், வழக்கறிஞர் ஏ. வசந்தி, சங்கங்களின் பதிவு இலாகாவின் (ஆர்.ஓ.எஸ்.) தலைமை இயக்குநர் முகமட் ராஸின் அப்துல்லா, ஆர்.ஓ.எஸ். விசாரணை அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரைப் பிரதிவாதிகளாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். எனினும் பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த இவ்வழக்கை தள்ளுபடி செய்வதில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவர் கடந்த 11.7.2016ஆம் தேதி வெற்றி பெற்றனர். தமது அறையில் இரு தரப்பின் வாதத் தொகுப்புகளை செவிமெடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி யியோ வீ சியாம் பழனி ஆதரவாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கில் பழனி ஆதரவாளர்கள் சார்பில் வழக்கறிஞர் டேவிட் மெத்தியூஸ், பிரகாஷ் ஆஜரான வேளையில் டாக்டர் சுப்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img