செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

புயல் சேதங்களை தவிர்த்த இந்திய தொழில்நுட்பம்
சனி 04 மே 2019 15:51:54

img

புதுடில்லி:

ஒடிசாவைத் தாக்கிய போனி புயலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், தொலைப்பேசி கோபுரங்கள் சாய்ந்த போதும் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

வானிலை மையத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகள் போனி புயலின் போக்கை துல்லியமாகக் கணித்தன. தமிழகத்தை அச்சுறுத்திய போனி புயல் ஒடிசாவை நோக்கி நகரத் தொடங்கியதும் ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் ரியல் டைம் கவர்னன்ஸ் சொசைட்டி எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு வழங்கப்பட்டது.

உயிர்ச் சேதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மீட்பு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் உதவிய இந்த தொழில்நுட்பம் மூலம் புயலின் ஒவ்வொரு நகர்வும் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஒடிசா பக்கம் புயல் நகர்கிறது என்பதை அறிந்த அடுத்த நிமிடமே ஒடிசா அரசுடன் ஆர்டிஜிஎஸ் வல்லுனர்கள் தொடர்பில் இருந்தனர். அரசுக்கு எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் வாட்ஸ் ஆப் மூலம் முக்கிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக புயல் தாக்கிய பின்னர் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு தாக்கிய புயலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த முறை பல லட்சம் பேர் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதும் புயல் தாக்கத்தை கட்டுப்ப டுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த உதவிக்கு ஒடிசா அரசு நன்றி தெரிவித்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img